கோவை அருகே பெரியகளந்தையில் முதியவரை தாக்கிய அண்ணன், தம்பிக்கு கடுங்காவல் தண்டனை

தெரு குழாயில் தண்ணீர் பிடிப்பது தொடர்பாக ஏற்பட்ட தகராறில் மயில்சாமி என்பவரை தாக்கிய குற்றத்திற்காக சிவக்குமாருக்கு 3 ஆண்டு 7 மாதம் கடுங்காவல் சிறை தண்டனையும், ரூ.1000 அபராதமும், அவரது அண்ணன் பழனிச்சாமிக்கு 4 ஆண்டு ஒரு மாதம் கடுங்காவல் சிறை தண்டனையும், ரூ.1000 அபராதமும் விதித்து நீதிபதி தீர்ப்பளித்தார்.


கோவை: கோவை, நெகமம் அருகே உள்ள பெரியகளந்தையைச் சேர்ந்தவர் மயில்சாமி (வயது 60). இவரது பக்கத்து வீட்டில் வசிப்பவர்கள் சிவகுமார் (வயது 35). இவரது அண்ணன் பழனிச்சாமி (வயது 37). அங்குள்ள தெரு குழாயில் தண்ணீர் பிடிப்பது தொடர்பாக இவர்களுக்கு இடையே அடிக்கடி தகராறு ஏற்பட்டு வந்துள்ளது.

இந்த நிலையில் கடந்த (7.5.18) அன்று ஏற்பட்ட தகராறில் சிவகுமாரும், அவரது அண்ணன் பழனிச்சாமியும் சேர்ந்து மயில்சாமியை கல்லாலும், கைகளாலும் தாக்கியதில் அவர் படுகாயம் அடைந்தார்.

இது குறித்து நெகமம் போலீசில் மயில்சாமி புகார் செய்தார். இதுதொடர்பாக சப் இன்ஸ்பெக்டர்கள் கார்த்திகேயன், செல்வராஜ் ஆகியோர் வழக்கு பதிவு செய்து சிவகுமார், பழனிச்சாமி ஆகியோரை கைது செய்தனர். இந்த வழக்கு பொள்ளாச்சி ஜூடிசியல் மாஜிஸ்திரேட் (எண்2) நீதிமன்றத்தில் நடந்து வந்தது. இந்த நிலையில் நேற்று மே.15 இந்த வழக்கில் தீர்ப்பு கூறப்பட்டது.

அப்போது வழக்கை விசாரித்த நீதிபதி பிரகாசம் குற்றம் சாட்டப்பட்ட சிவக்குமாருக்கு 3 ஆண்டு 7 மாதம் கடுங்காவல் சிறை தண்டனையும், ரூ.1000 அபராதமும், அவரது அண்ணன் பழனிச்சாமிக்கு 4 ஆண்டு ஒரு மாதம் கடுங்காவல் சிறை தண்டனையும், ரூ.1000 அபராதமும் விதித்து தீர்ப்பளித்தார்.

Newsletter

காவலர் தினம்: கோவை காவல்துறை அருங்காட்சியகத்தில் செப். 6-ல் இலவச அனுமதி

வரும் செப் 6-ம் தேதி காவலர் தினத்தையொட்டி, கோவையில் உள்ள தமிழ்நாடு காவல்துறை அருங்காட்சியகத்தில் பொதுமக்கள் மற்றும் பள்ள...

கோவை ரயில் நிலைய பேருந்து நிறுத்தத்தில் கள்ளச்சந்தையில் மது விற்பனையா?

முக்கிய அரசு அலுவலகங்கள் அமைந்துள்ள கோவை ரயில் நிலையம் அருகே உள்ள பேருந்து நிறுத்தத்தில், பயணி போல் அமர்ந்திருந்த நபர்...

கோவை மாநகராட்சி ஆணையர் வீடற்றோர் விடுதிகளை ஆய்வு

கோவை மாநகராட்சி ஆணையர் கட்டா ரவி தேஜா IAS மத்திய மற்றும் தெற்கு மண்டலங்களில் உள்ள நகர்ப்புற வீடற்றோர் தங்கும் விடுதிகளை...

சரவணம்பட்டி துணை மின் நிலையத்தில் நாளை (03.09.2026) மின்தடை

கோவை சரவணம்பட்டி துணை மின் நிலையத்தில் நாளை செப்டம்பர் 3ஆம் தேதி காலை 9 மணி முதல் மாலை 4 மணி வரை மாதாந்திர பராமரிப்பு பண...

சிங்காநல்லூர் தொகுதி வார்டு 27-ல் சுகாதார மையம், குடிநீர் பராமரிப்பு மற்றும் தூய்மைப் பணிகள் ஆய்வு

கோவை, சிங்காநல்லூர் தொகுதி வார்டு கவுன்சிலர் அம்பிகா தனபால் பீளமேடு பகுதியில் சுகாதார மையம், உப்பு நீர் குழாய் பழுது பார...

Juvenile at the Time of Assault: 21-Year-Old Sentenced to 3 Years in Coimbatore

Sathish, a 21-year-old man, has been sentenced to three years in prison in connection with a 2019 assault case in Podanu...