கோவை நவ இந்தியா ஜங்சன் அருகே கல்லூரி மாணவனின் காரில் இருந்த செல்போன் மற்றும் பணம் திருட்டு

காரை உரசிவிட்டு பின்னர் வாக்குவாதம் செய்து, காரின் முன் இருக்கையில் இருந்த செல்போன் மற்றும் 700 ரூபாய் பணத்தை பைக்கில் வந்த நபர் திருடிச் சென்றதாக தெரிகிறது. இதுகுறித்து கல்லூரி மாணவர் அளித்த புகாரின்பேரில் போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.


கோவை: கோவை நஞ்சுண்டாபுரம் அப்துல்கலாம் தெருவை சேர்ந்தவர் பாலகார்த்திக் (21). இவர் கோவையில் உள்ள தனியார் கல்லூரியில் படித்து வருகிறார். நேற்று மே.16 பாலகார்த்திக் பீளமேட்டில் உள்ள ஒரு கடைக்கு காரில் சென்றார். பின்னர் அங்கிருந்து வீடு திரும்பி கொண்டிருந்தார்.

அவர் நவ இந்தியா ஜங்சன் அருகே வந்தபோது, அந்த வழியாக வந்த பைக் கார் மீது உரசியது. இதில் பாலகார்த்திக்கிற்கும், பைக்கில் வந்தவருக்கும் இடையே வாக்குவாதம் ஏற்பட்டது. பின்னர் அந்த நபர் அங்கிருந்து சென்று விட்டார்.

இதனையடுத்து காரில் முன் இருக்கையில் வைத்திருந்த பாலகார்த்திக்கின் செல்போன் மற்றும் ரூ.700 காணவில்லை. பைக்கில் வந்த நபர் திருடி சென்றதாக தெரிகிறது. பின்னர் இது குறித்து பாலகார்த்திக் பீளமேடு போலீசில் புகார் அளித்தார். அந்த புகாரின் பேரில், பீளமேடு போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரித்து வருகின்றனர்.

Newsletter

கோவை விமான நிலையத்தில் வெடிகுண்டு மிரட்டல்: வதந்தி என உறுதி

கோவை விமான நிலையத்திற்கு நேற்று இரவு வெடிகுà...