கோவை மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் என் கல்லூரி கனவு வழிகாட்டு நிகழ்ச்சி

கோவை மாவட்ட ஆட்சியர் அலுவலக கூட்டரங்கில், மாவட்ட ஆட்சித் தலைவர் கிராந்திகுமார் பாடி தலைமையில் நடைபெற்ற என் கல்லூரி கனவு நிகழ்ச்சியில், ஆதிதிராவிடர் பழங்குடியின மாணவர்கள் கலந்து கொண்டு பயனடைந்தனர்.


கோவை: ஆதிதிராவிடர் மற்றும் பழங்குடியினர் நலத்துறை சார்பில் என் கல்லூரி கனவு எனும் உயர்கல்விக்கு வழிகாட்டும் நிகழ்ச்சி தமிழகம் முழுவதும் நடைபெற்று வருகிறது. இதில் 12 ஆம் வகுப்பு முடித்த ஆதிதிராவிடர் பழங்குடியின மாணவர்கள் கல்லூரியில் சேர்வதற்கும், அவர்கள் எந்த துறையை தேர்ந்தெடுத்தால் நன்றாக இருக்கும் என்றும் பல்வேறு ஆலோசனைகள்வழங்கப்படுகின்றன.



மேலும் கல்லூரியில் அரசினுடைய உதவி எவ்வாறு பெறுவது என்பது குறித்தும் எடுத்துரைக்கப்பட்டு பல்வேறு ஆலோசனைகளும், அறிவுரைகளும் வழங்கப்படுகின்றன. இந்நிலையில் கோவை மாவட்ட ஆட்சியர் அலுவலக கூட்டரங்கில் என் கல்லூரி கனவு நிகழ்ச்சி மாவட்ட ஆட்சித் தலைவர் கிராந்திகுமார் பாடி தலைமையில் இன்று மே.18 நடைபெற்றது.



இதில் கோவை மாவட்டத்தை சேர்ந்த ஆதிதிராவிடர் பழங்குடியின மாணவர்கள் பலர் கலந்து கொண்டு பயனடைந்தனர். இந்நிகழ்வில் மாவட்டஆதிதிராவிடர் நல அலுவலர் மணிமேகலை, தாட்கோ மாவட்ட மேலாளர் மகேஸ்வரி உட்பட பல்வேறு அலுவலர்கள் கலந்து கொண்டனர்.

Newsletter

தொண்டாமுத்தூரில் AIADMK வேட்பாளர் S.P. வேலுமணிக்கு இந்து மக்கள் கட்சி ஆதரவு அறிவிப்பு

தொண்டாமுத்தூர் தொகுதியில் இந்து மக்கள் கட்சி சுயேச்சை வேட்பாளர் சூர்யாவின் வேட்பு மனு நிராகரிக்கப்பட்ட நிலையில், மாநில ப...

கோவை மாவட்டத்தில் தேர்தல் சோதனையில் ரூ.8.18 கோடி பணமும் நகையும் பறிமுதல்

கோவை மாவட்டத்தில் தேர்தல் பறக்கும்படை மற்றும் வருமான வரித்துறையினர் நடத்திய சோதனையில் கடந்த இரு நாள்களில் ரூ.8.18 கோடி ர...

மேட்டுப்பாளையம் தொகுதியில் கவிதா கல்யாணசுந்தரத்திற்கு ஆதரவாக காரமடையில் தீவிர வாக்கு சேகரிப்பு

கோவை வடக்கு மாவட்ட DMK செயலாளர் தொண்டாமுத்தூர் ரவி தலைமையில் மேட்டுப்பாளையம் சட்டமன்ற தொகுதி வேட்பாளர் கவிதா கல்யாணசுந்த...

ஆனைகட்டியில் மலைவாழ் மக்களிடம் பிரச்சாரம் மேற்கொண்ட அதிமுக வேட்பாளர் அருண்குமார்

கோவை ஆனைகட்டி பகுதியில் மலைவாழ் மக்கள் மத்தியில் அதிமுக வேட்பாளர் பி.ஆர்.ஜி.அருண்குமார் தனது தேர்தல் பிரச்சாரத்தை மேற்கொ...

கோவை கடைவீதி போலீசாரின் அதிரடி சோதனை: மெத்தாம்பெட்டமைன் விற்பனை செய்த 3 பேர் கைது

கோவை கடைவீதி போலீசார் தெற்கு உக்கடத்தில் ரோந்து பணியின்போது சந்தேகத்தின் அடிப்படையில் 3 பேரை சோதனை செய்தனர். அவர்களிடம்...

தமிழ்ப் புத்தாண்டு: மருதமலை கோயிலுக்கு காா் தடை; பேருந்து சேவை அனுமதி

தமிழ்ப் புத்தாண்டு தினமான ஏப்ரல் 14ல் கோவை மருதமலை சுப்பிரமணிய சுவாமி கோயிலுக்கு நான்கு சக்கர வாகனங்களில் செல்ல தடை விதி...