துடியலூர் அடுத்த வெள்ளக்கிணறு பகுதியில் கஞ்சா சாக்லேட் விற்பனைக்கு வைத்திருந்த 2 பேர் கைது

துடியலூர் அருகே வெள்ளக்கிணறு பகுதியில் கஞ்சா சாக்லேட் விற்ற இரு நபர்கள் கைது. விசாரணையின் போது விற்பனை நடைபெற்றது உறுதியானது, மொத்தம் 7 கிலோ கஞ்சா சாக்லேட் பறிமுதல்.


கோவை: துடியலூர் அடுத்த வெள்ளக்கிணறு பகுதியில் கஞ்சா சாக்லேட் விற்பனை செய்யப்படுவதாக ரகசிய தகவல் கிடைத்ததும், போலீசார் நேற்று மே.18-ல் அந்த பகுதிக்கு சென்று சோதனை நடத்தினர்.

அங்கு நின்றிருந்த 2 பேரை பிடித்து, விசாரித்தபோது முரணாக பதில் அளித்து வந்த பட்சத்தில், சோதனையில் இருவரும் கஞ்சா சாக்லேட் விற்பனையில் ஈடுபட்டது தெரியவந்து. தொடர்ந்து போலீசார் கஞ்சா விற்பனையில் ஈடுபட்ட பீகார் மாநிலத்தை சேர்ந்த ராம்நந்த் ஷானி (23), ராஜூவ் ஷகானி(21) ஆகிய இருவரை கைது செய்தனர்.

அவர்களிடம் இருந்து 7 கிலோ கஞ்சா சாக்லேட் பறிமுதல் செய்யப்பட்டு, இருவரையும் கோர்ட்டில் ஆஜர்படுத்தினர்.

Newsletter

கோவை விமான நிலையத்தில் வெடிகுண்டு மிரட்டல்: வதந்தி என உறுதி

கோவை விமான நிலையத்திற்கு நேற்று இரவு வெடிகுà...