கஞ்சா வழக்கில் சவுக்கு சங்கருக்கு 2 நாள் போலீஸ் காவல் - மதுரை நீதிமன்றம் உத்தரவு

கஞ்சா வழக்கில் கைது செய்யப்பட்ட சவுக்கு சங்கரை இரண்டு நாள் காவலில் எடுத்து விசாரிக்க காவல்துறைக்கு நீதிபதி செங்கமல செல்வன் அனுமதி அளித்து உத்தரவிட்டுள்ளார்.


கோவை: பிரபல யூடியூபர் சவுக்கு சங்கர், தமிழ்நாடு காவல்துறை அதிகாரிகள் மற்றும் பெண் காவலர்கள் குறித்து அவதூறாகப் பேசிய வழக்கில், மே 4ஆம் தேதி தேனி மாவட்டத்தில், கோவை சைபர் கிரைம் போலீசாரால் கைது செய்யப்பட்டு, நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தி கோவை மத்திய சிறையில் அடைக்கப்பட்டார்.

இதனிடையே, சவுக்கு சங்கர் கைது செய்யப்பட்டபோது கஞ்சா வைத்திருந்ததாகக் கூறி சங்கர் உள்ளிட்ட மூவர் மீது தேனி பழனிசெட்டிபட்டி போலீசார் வழக்குப் பதிவு செய்தனர். அந்த வழக்கில், சவுக்கு சங்கர் மே 7ஆம் தேதி மீண்டும் கைது செய்யப்பட்டார்.

கஞ்சா வைத்திருந்ததாக தேனியில் கைது செய்யப்பட்ட வழக்கில் சவுக்கு சங்கரிடம் காவல் துறை விசாரணை நடத்த அனுமதி கோரி போலீசாரும், இந்த வழக்கில் ஜாமீன் கோரி சவுக்கு சங்கரும் மனுத் தாக்கல் செய்திருந்தனர்.

இந்த நிலையில், இதுதொடர்பான விசாரணைக்காக, கோவையிலிருந்து பலத்த போலீஸ் பாதுகாப்புடன் அழைத்து வரப்பட்டு, மதுரையில் உள்ள போதைப்பொருள் தடுப்புப் பிரிவு சிறப்பு நீதிமன்றத்தில் இன்று (மே 20) சவுக்கு சங்கர் ஆஜர்படுத்தப்பட்டார்.

இதனையடுத்து, இந்த வழக்கின் விசாரணை நீதிபதி செங்கமல செல்வன் முன்னிலையில் நடைபெற்றது. அப்போது, சவுக்கு சங்கரை இரண்டு நாட்கள் காவலில் எடுத்து விசாரிக்கை நீதிபதி உத்தரவிட்டார். இதனையடுத்து, பெண் காவல்துறை பாதுகாப்புடன் அவர் அழைத்து செல்லப்பட்டார்.

Newsletter

கோவை விமான நிலையத்தில் வெடிகுண்டு மிரட்டல்: வதந்தி என உறுதி

கோவை விமான நிலையத்திற்கு நேற்று இரவு வெடிகுà...