கோவை ரத்தினபுரியில் வீட்டின் பூட்டை உடைத்து ரூ.24,000 பணம் திருட்டு - போலீசார் விசாரணை

ஆளில்லாத நேரத்தில் வீட்டின் பூட்டை உடைத்து பீரோவில் இருந்த 24 ஆயிரம் ரூபாய் பணத்தை திருடிச்சென்ற மர்ம நபரை சிசிடிவி கேமிராவில் பதிவான காட்சிகள் மூலம் போலீசார் தேடி வருகின்றனர்.


கோவை: கோவை ரத்தினபுரி தில்லைநகர் நாராயணசாமி தெருவை சேர்ந்தவர் கோவிந்தன். மனைவி சென்னம்மாள்(35). இவர் நேற்று மே.19 வீட்டை பூட்டி விட்டு அருகே உள்ள தனது சகோதரி வீட்டுக்கு சென்றார். பின்னர் சிறிது நேரம் கழித்து வீடு திரும்பினார். அப்போது வீட்டின் முன்பக்க கதவு உடைக்கப்பட்டிருந்தது.

உள்ளே சென்று பார்த்தபோது பீரோவில் இருந்த ரூ.24,000 பணம் காணவில்லை. இதனால் அதிர்ச்சியடைந்த சென்னம்மாள், இது குறித்து ரத்தினபுரி காவல் நிலையத்தில் புகார் அளித்தார். அந்த புகாரின் பேரில், போலீசார் வழக்குப்பதிவு செய்தனர். தொடர்ந்து போலீசார் மற்றும் கைரேகை நிபுணர்கள் சம்பவ இடத்துக்கு சென்று ஆய்வு செய்தனர்.

அப்போது வீட்டில் பதிவாகி இருந்த ஒரு கைரேகையை கைப்பற்றினர். மேலும் அந்த பகுதியில் இருந்த சிசிடிவி கேமரா காட்சிகளை கைப்பற்றி திருட்டில் ஈடுபட்ட மர்ம நபரை போலீசார் தேடி வருகின்றனர்.

Newsletter

கோவை விமான நிலையத்தில் வெடிகுண்டு மிரட்டல்: வதந்தி என உறுதி

கோவை விமான நிலையத்திற்கு நேற்று இரவு வெடிகுà...