மின்மாற்றி மற்றும் மின்கம்பங்களில் கால்நடைகளை கட்டக்கூடாது - கால்நடை வளர்ப்போருக்கு கால்நடை பராமரிப்புத்துறை அறிவுரை

மழைக்காலங்களில் கால்நடைகளை திறந்தவெளியில் கால்நடை மேய்ச்சலுக்காக அனுப்ப வேண்டாம், இடி மற்றும் மின்னல் ஏற்படும்போது திறந்தவெளியில் மாடுகளை கட்டக்கூடாது என கால்நடை பராமரிப்புத்துறை மண்டல இணை இயக்குநர் அறிவுறுத்தியுள்ளார்.


கோவை: கோயம்புத்தூர் மாவட்டத்திலுள்ள கால்நடை வளர்ப்போர் மற்றும் விவசாயிகள் மழைக்காலங்களில் பின்பற்ற வேண்டிய வழிமுறைகள் இன்று மே.22 அறிவிக்கப்பட்டுள்ளன. அதன்படி மழைக்காலங்களில் கால்நடைகளை திறந்தவெளியில் கால்நடை மேய்ச்சலுக்காக அனுப்ப வேண்டாம், இடி மற்றும் மின்னல் ஏற்படும்போது திறந்தவெளியில் மாடுகளை கட்டக்கூடாது. உயர் மின்னழுத்த மின் கம்பிகள் செல்லக்கூடிய இடங்களுக்கு கால்நடைகளை அருகில் கொண்டு செல்லக்கூடாது.

மின்மாற்றி மற்றும் மின்கம்பங்களில் கால்நடைகளை கட்டக்கூடாது. தண்ணீர் தேங்கக்கூடிய தாழ்வான பகுதிகளிலிருந்து கால்நடைகளை மேட்டுப்பாங்கான பகுதிக்கு உடனடியாக மாற்றி அமைக்க வேண்டும். கால்நடைகள் கட்டும் கொட்டகையினை நல்லமுறையில் பராமரித்து, சுகாதாரமான தண்ணீர் மற்றும் தீவனங்கள் வழங்குமாறு கேட்டுக்கொள்ளப்படுகிறார்கள்.

கோயம்புத்தூர் மாவட்டம் கால்நடை பராமரிப்புத்துறை சார்ந்த அனைத்து கால்நடை மருத்துவ நிலையங்களிலும் கால்நடைகளுக்கு தேவையான அனைத்து மருந்துகள், தடுப்பூசிகள், தாதுஉப்புக் கலவை போதுமானளவு கையிருப்பில் உள்ளது. பருவ மழைக் காலங்களில் கால்நடை பாதுகாத்திடும் பொருட்டு, கால்நடை பராமரிப்புத்துறையின் மூலம் வழங்கப்படும் மேற்படி சேவைகளை கால்நடை வளர்ப்போர் மற்றும் விவசாயிகள் பயன்படுத்தியும், மேற்கூறிய வழிகாட்டு நெறிமுறைகளை வழுவாது பின்பற்றுமாறு கால்நடை பராமரிப்புத்துறை மண்டல இணை இயக்குநர் கேட்டுக்கொண்டுள்ளார்.

Newsletter

கோவை விமான நிலையத்தில் வெடிகுண்டு மிரட்டல்: வதந்தி என உறுதி

கோவை விமான நிலையத்திற்கு நேற்று இரவு வெடிகுà...