தொண்டாமுத்தூர் மகாராணி அவென்யூவில் காட்டுப் பன்றிகளின் தொல்லை - மக்கள் நடவடிக்கை கோரிக்கை

கோவை தொண்டாமுத்தூர் மகாராணி அவென்யூவில் 500 க்கும் மேற்பட்ட வீடுகள் உள்ள பகுதியில் காட்டுப்பன்றிகள் கடும் தொல்லை அளிக்கின்றன, நடவடிக்கை எடுக்க மக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.


கோவை: கோவை வடவள்ளி பகுதியில் இருந்து தொண்டாமுத்தூர் செல்லும் சாலையில் மகாராணி அவென்யூ அமைந்து உள்ளது. இங்கு 500 க்கும் மேற்பட்ட வீடுகள் உள்ளன. இதில் சுமார் 2000 க்கும் மேற்பட்டோர் குடும்பத்தோடு வசித்து வருகின்றனர். 

இயற்கை எழில் சூழ்ந்த இந்தப் பகுதியில் கடந்த சில நாட்களாக காட்டு பன்றிகள் நடமாட்டம் அதிகரித்துள்ளது. கூட்டம் கூட்டமாக வரும் காட்டு பன்றிகள் அங்கு வீடுகளுக்கு அருகே உள்ள வாழை மரங்கள் மற்றும் செடிகளை கடித்து சேதப்படுத்துகின்றன. 

இது குறித்து அப்பகுதி மக்கள் மே.22 கூறும் போது, “கடந்த 30 ஆண்டுகளாக இதே பகுதியில் வசித்து வருகிறோம். ஆனால் எந்த ஒரு வனவிலங்கு தொந்தரவும் இல்லாத பகுதியாக இந்த குடியிருப்பு இருந்து வந்தது. 

இந்நிலையில் கடந்த சில நாட்களாக கூட்டமாக வரும் காட்டுப் பன்றிகளால் அச்சுறுத்தல் ஏற்பட்டுள்ளது. காட்டு பன்றிகள் நடமாட்டம் இருப்பதால் குழந்தைகளை வெளியில் விளையாட அனுமதிப்பதற்கு அச்சமாக உள்ளது.

மேலும் முதியவர்கள் அதிகம் உள்ள இந்த பகுதியில் காட்டுப் பன்றிகள் நடமாட்டத்தை உடனடியாக வனத் துறையினர் நடவடிக்கை எடுத்து கட்டுப்படுத்த வேண்டும் எனத் தெரிவித்தனர்.

Newsletter

கோவை விமான நிலையத்தில் வெடிகுண்டு மிரட்டல்: வதந்தி என உறுதி

கோவை விமான நிலையத்திற்கு நேற்று இரவு வெடிகுà...