பெண்கள் மீதான வன்கொடுமைகளை தடுப்பது குறித்து பெண்கள் மட்டுமே பங்கேற்ற இருசக்கர வாகன விழிப்புணர்வு பேரணி

கோவையில் குழந்தைகள் மற்றும் பெண்கள் மீதான வன்கொடுமைகளை தடுப்பது குறித்து விழிப்புணர்வு ஏற்படுத்தும் விதமாக பெண்கள் மட்டுமே பங்கேற்ற இருசக்கர வாகன விழிப்புணர்வு பேரணி இன்று நடைபெற்றது. இதில் 100க்கும் மேற்பட்ட பெண்கள் இருசக்கர வாகனங்களுடன் கலந்து கொண்டனர். 



கோவையில் ஏ.எஸ்.கே என்ற என்ற தொண்டு நிறுவனம் சார்பில் குழந்தைகள் மற்றும் பெண்கள் மீதான வன்கொடுமைகளை தடுப்பது தொடர்பாக இருசக்கர வாகன விழிப்புணர்வு பேரணி நடைபெற்றது. 



இந்த விழிப்புணர்வு பேரணியை கோவை மாவட்ட காவல்துறை கண்காணிப்பாளர் ரம்யா பாரதி, கோவை மாநகர போக்குவரத்து காவல்துறை துணை ஆணையர் சரவணன் ஆகியோர் கொடியசைத்து துவக்கி வைத்தனர். இந்த பேரணியானது கோவை வ.உ.சி மைதானத்தில் இருந்து ஆனைகட்டி வரை சுமார் 40 கி.மீ தூரம் வரை நடைபெறுகின்றது. 



பெண்கள் மட்டுமே பங்கேற்றுள்ள இந்த இருசக்கர வாகன பேரணியில் நூற்றுக்கும் மேற்பட்ட பெண்கள் கலந்து கொண்டனர். 



இருசக்கர வாகன பேரணியை துவக்கி வைத்து பேட்டியளித்த காவல்துறை கண்காணிப்பாளர் ரம்யா பாரதி, பெண்களுக்கு எதிரான குற்றங்களை தடுக்க காவல் துறை சார்பில் பல்வேறு நடவடிக்கைகள் எடுக்கப்பட்டு வருவதாகவும், அனைத்து இடங்களிலும் விழிப்புணர்வு நிகழ்ச்சிகள் காவல் துறையால் நடத்தப்பட்டு வருவதாகவும் தெரிவித்தார். இருசக்கர பேரணி செல்லும் வழியில் உள்ள கிராமங்களில் பெண்கள் மற்றும் குழந்தைகள் மீதான வன்கொடுமைகளை தடுப்பது குறித்து விழிப்புணர்வு ஏற்படுத்தும் வகையில் நிகழ்ச்சிகள் நடத்தப்படுகின்றன. மேலும் ஆனைகட்டியில் உள்ள மலைவாழ் கிராமங்களில் உள்ள பள்ளிகளில் மாணவர்களுக்கு விழிப்புணர்வு நிகழ்ச்சிகள் நடத்தப்படுகின்றது.

Newsletter

கோவையில் ‘“Army of Dheeran Annamalai” போஸ்டர்கள்; புதிய அரசியல் பரபரப்பு.

கோவையில் 2 நாள் பா.ஜ.க மையக்குழு கூட்டம் நடைபெற்று வந்த நிலையில், இன்று “Fearless Minds Have No Limits” என்ற வாசகத்துடன்...

கோவை மாவட்ட வனப்பகுதிகளில் புலிகள் கணக்கெடுப்பிற்கு தானியங்கி கேமராக்கள் நிறுவ பணி தொடக்கம்

கோவை மாவட்டத்தில் வால்பாறை, பொள்ளாச்சி, உலாந்தி மற்றும் மானாம்பள்ளி வனச்சரகங்களில் புலிகள் கணக்கெடுப்பிற்காக 350க்கும் ம...

பீளமேடு பகுதியில் குடிநீர் குழாய் பழுது மற்றும் தூய்மை பணிகளை ஆய்வு செய்த கவுன்சிலர்

கோயமுத்தூர் மாநகராட்சி வடக்கு மண்டலம் வார்டு 27 பீளமேடு பகுதியில் சூயஸ் குடிநீர் குழாய் பழுதுபார்க்கும் பணி மற்றும் பல்வ...

புது சித்தாபுதூர் ஸ்ரீ பண்ணாரி மாரியம்மன் திருக்கோவிலில் 86ஆம் ஆண்டு திருக்கல்யாண திருத்தேர் திருவிழா

கோவை புது சித்தாபுதூரில் உள்ள அருள்மிகு ஸ்ரீ பண்ணாரி மாரியம்மன் திருக்கோவிலில் 86ஆம் ஆண்டு திருக்கல்யாண ரதமஹோற்சவம் மற்ற...

தமிழ்நாடு வேளாண்மைப் பல்கலைக்கழகத்தில் "தாவரத் திசு வளர்ப்பு நுட்பங்கள்" குறித்த செய்முறைப் பயிற்சி

கோயம்புத்தூரில் உள்ள தமிழ்நாடு வேளாண்மைப் பல்கலைக்கழகத்தில் மே 19-22, 2026 வரை தாவரத் திசு வளர்ப்பு நுட்பங்கள் குறித்த ச...

கோவை வேலைவாய்ப்பு பதிவுக்கு கட்டணம் இல்லை; போலி விளம்பரங்களை நம்ப வேண்டாம் - ஆட்சியர் எச்சரிக்கை

கோவை மாவட்ட வேலைவாய்ப்பு மையத்தின் அனைத்து சேவைகளும் இலவசம் என்றும், WhatsApp, Facebook, YouTube, Instagram போன்ற தளங்கள...