கோவை ஆட்சியர் அலுவலகத்தில் பிளாஸ்டிக் பொருட்கள் தடை தொடர்பாக மாவட்ட அளவிலான பணிக்குழுக் கூட்டம்

வால்பாறைக்கு வருகைதரும் சுற்றுலாப் பயணிகளால் தடை செய்யப்பட்ட பிளாஸ்டிக் பொருட்கள் பயன்படுத்துகிறதா? என்பதை வனத்துறையுடன் இணைத்து, சோதனைச் சாவடிகளில் சம்மந்தப்பட்ட துறையினர் ஆய்வு செய்யவேண்டும் என்று கோவை ஆட்சியர் வலியுறுத்தியுள்ளார்.


கோவை: கோயம்புத்தூர் மாவட்ட ஆட்சியர் அலுவலக கூட்டரங்கில் இன்று (24.05.2024) ஒரு முறை பயன்படுத்தி தூக்கி எறியப்படும் பிளாஸ்டிக் பொருட்கள் தடை தொடர்பாக மாவட்ட அளவிலான பணிக்குழுக் கூட்டம் மாவட்ட ஆட்சித்தலைவர் கிராந்திகுமார் பாடி தலைமையில் நடைபெற்றது.



இக்கூட்டத்தில் மாவட்ட சுற்றுச்சூழல் பொறியாளர் (கோவை தெற்கு) ஆர்.சந்திரசேகரன், மண்டல இணை இயக்குநர் நகராட்சி இளங்கோவன் உட்பட நகராட்சி ஆணையாளர்கள், பேரூராட்சி அலுவலர்கள் மற்றும் அரசு அலுவலர்கள் பலர் கலந்து கொண்டனர்.



இக்கூட்டத்தில் மாவட்ட ஆட்சித்தலைவர் தெரிவித்ததாவது, ஒரு முறை பயன்படுத்தி தூக்கி எறியப்படும் பிளாஸ்டிக் பொருட்களான பிளாஸ்டிக் கோப்பைகள், அனைத்து அளவிலான மற்றும் தடிமன் கொண்ட பிளாஸ்டிக் கைப்பைகள், நெய்யப்படாத பிளாஸ்டிக் கைப்பைகள், பிளாஸ்டிக் பூசப்பட்ட காகிதத் தட்டுகள், பிளாஸ்டிக் டம்ளர்கள், தெர்மாகோல் கோப்பைகள், உணவுப் பொருட்களை கட்ட பயன்படுத்தப்படும் பிளாஸ்டிக் தாள்கள், தண்ணீர் பைகள்/ பாக்கெட்டுகள், பிளாஸ்டிக் உறிஞ்சு குழல்கள் மற்றும் பிளாஸ்டிக் கொடிகள் போன்றவை தயாரிக்கப்படுவதும், சேமித்து வைப்பதும், விநியோகிப்பதும், விற்பதும், உபயோகிப்பதும் தடை செய்யப்பட்டுள்ளன.

மாநகராட்சி, நகராட்சி, பேரூராட்சி, ஊராட்சி பகுதிகளில் தடையை மீறி இப்பொருட்களை பயன்படுத்துவது, விற்பனை செய்யவது, இருப்பு வைப்பதும் சட்டப்படி குற்றமாகும். கடைகளில் தடைசெய்யப்பட்ட பிளாஸ்டிக் பொருட்கள் விற்பனை செய்யப்படுகிறதா என்பதை அவ்வப்போது ஆய்வு செய்து, அவ்வாறு வைத்திருப்பின், அவர்கள் மீது சட்டப்படியான நடவடிக்கைகளும், அரசு விதிகளின்படி, அபாராதமும் விதிக்கவேண்டும்.

தடைசெய்யப்பட்ட பிளாஸ்டிக் பொருட்களை பறிமுதல் செய்து சிமெண்ட் தொழிற்சாலைகளுக்கு எரிபொருளாக பயன்படுத்துவதற்கு அனுப்பி வைக்கவேண்டும். தமிழ்நாடு மாசு கட்டுப்பாடு வாரியம் மூலம் பல்வேறு விழிப்புணர்வு நிகழ்ச்சிகள் மற்றும் நடவடிக்கைகள் எடுக்கப்பட்டு வருகின்றன. அவற்றுள், மாவட்ட சுற்றுச்சூழல் குழுக் கூட்டங்கள், மாவட்டந்தோறும் பெருந்திரள் விழிப்புணர்வு பேரணிகள், சமூக ஊடகங்கள் மூலமாக விழிப்புணர்வு, தேசிய நெடுஞ்சாலைகளில் அறிவிப்பு பதாகைகள் நிறுவுதல், துண்டு பிரசுரங்கள், குறும்படங்கள் போன்றவை மூலம் தமிழ்நாடு மாசு கட்டுப்பாடு வாரியம் மக்களிடம் விழிப்புணர்வை ஏற்படுத்தி வருகிறது.

வால்பாறைக்கு வருகைதரும் சுற்றுலாப் பயணிகளால் தடை செய்யப்பட்ட பிளாஸ்டிக் பொருட்கள் பயன்படுத்துகிறதா என்பதை வனத்துறையுடன் இணைத்து, சோதனைச் சாவடிகளில் சம்மந்தப்பட்ட துறைகள் ஆய்வு செய்யவேண்டும். பிளாஸ்டிக் பாட்டில்களில் குடிநீர் விற்பனையை தவிர்க்கும் வகையில், வால்பாறையில் முக்கியமான சுற்றுலா பகுதிகளில் குடிநீர் ஏடிஎம் வைப்பதற்கான நடவடிக்கையினை மேற்கொள்ளவேண்டும்.

அரசால் பிளாஸ்டிக் பை பயன்படுத்துவதை தவிர்க்கும் விதமாக, கொண்டுவரப்பட்ட மீண்டும் மஞ்சப்பை திட்டம் குறித்து மக்களிடம் விழிப்புணர்வு ஏற்படுத்தவேண்டும். தினசரி சந்தைகள் உள்ளிட்ட தேவையான இடங்களில் மஞ்சப்பை ஏடிஎம் இயந்திரங்கள் நிறுவ நடவடிக்கை எடுக்கவேண்டும். திடக்கழிவு மேலாண்மை திட்டத்தின் கீழ் மக்கும் குப்பை, மக்காத குப்பைகளை தரம் பிரித்து, மக்காத பிளாஸ்டிக் குப்பைகளை மறுசுழற்சி செய்ய தேவையான நடவடிக்கை எடுக்க வேண்டும்.

சுற்றுச்சூழல் மீது அக்கறை கொண்டு, வருங்கால சந்ததினருக்கு மாசற்ற சூழலை உருவாக்கவும், பொதுமக்கள் தடை செய்யப்பட்ட பிளாஸ்டிக் பொருட்களை பயன்படுத்துவதை தவிர்க்க வேண்டும் என கேட்டுக்கொள்ளப்படுகிறது, என மாவட்ட ஆட்சித்தலைவர் கிராந்திகுமார் பாடி தெரிவித்தார்.

Newsletter

மேட்டுப்பாளையம் துணை மின் நிலையத்தில் நாளை (29.08.2026) மின்தடை

மேட்டுப்பாளையம் துணை மின் நிலையத்தில் மாதாந்திர பராமரிப்பு பணிகள் நாளை (29.08.2026) காலை 9 மணி முதல் மாலை 5 மணி வரை நடைப...

பசூர் துணை மின் நிலையத்தில் நாளை (29.08.2026) மின்தடை

பசூர் துணை மின் நிலையத்தில் நாளை ஆகஸ்ட் 29 அன்று காலை 9 மணி முதல் மாலை 5 மணி வரை மாதாந்திர மின் பராமரிப்பு பணி நடைபெறும்...

அன்னூர் துணை மின் நிலையத்தில் நாளை (29.08.2026) மின்தடை

அன்னூர் துணை மின் நிலையத்தில் நாளை (29.08.2026) காலை 9 மணி முதல் மாலை 5 மணி வரை மாதாந்திர பராமரிப்புப் பணிகள் நடைபெறும்....

கோவை டாடாபாத் துணை மின் நிலையத்தில் நாளை (29.08.2026) மின்தடை

கோவை டாடாபாத் துணை மின் நிலையத்தில் ஆகஸ்ட் 29 அன்று காலை 9 மணி முதல் மாலை 5 மணி வரை மாதாந்திர மின் பராமரிப்பு பணிகள் நடை...

சூலூர் துணை மின் நிலையத்தில் நாளை (29.08.2026) மின்தடை

சூலூர் துணை மின் நிலையத்தில் மாதாந்திர பராமரிப்பு பணிகள் நாளை (29.08.2026) காலை 9 முதல் மாலை 5 வரை நடைபெறும். டி.எம். நக...

Mayor Inaugurates Special Camp for Persons with Disabilities in Coimbatore

A special camp for persons with disabilities was inaugurated and inspected by Mayor Ranganayaki Ramachandran at Kaumara...