பழங்குடியின மாணவர்கள் போஸ்ட் மெட்ரிக் கல்வி உதவி தொகை பெற இணையதளத்தில் விண்ணப்பிக்கலாம் - கோவை ஆட்சியர் தகவல்

2024-2025 ஆம் கல்வி ஆண்டிற்கான முதுநிலை, பி.எச்.டி (Ph.D) மற்றும் முனைவர் ஆராய்ச்சி உயர்படிப்பை வெளிநாடுகளில் தொடர தேர்ந்தெடுக்கப்படும் பழங்குடியின மாணவர்களுக்கு கல்வி உதவித்தொகை வழங்கப்படவுள்ளது. உதவித்தொகை பெற இணையதளத்தில் விண்ணப்பிக்கலாம் என கோவை ஆட்சியர் தெரிவித்துள்ளார்.



கோவை: கோவை மாவட்ட ஆட்சியர் கிராந்தி குமார் பாடி அண்மையில் வெளியிட்டுள்ள அறிக்கையில், பழங்குடியினர் நல இயக்குநரகம் மூலம் போஸ்ட் மெட்ரிக் கல்வி உதவித் தொகை பழங்குடியினர் மாணாக்கர்களுக்கு வழங்கப்பட்டு வருகிறது.

தற்போது, புதிய திட்டமாக ஒன்றிய அரசின் பழங்குடியின நல அமைச்சகத்தின் அறிவிப்பின்படி 2024-2025 ஆம் கல்வி ஆண்டிற்கான முதுநிலை, பி.எச்.டி (Ph.D) மற்றும் முனைவர் ஆராய்ச்சி உயர்படிப்பை (National Overseas Scholarship Scheme (NOS) வெளிநாடுகளில் தொடர தேர்ந்தெடுக்கப்படும் பழங்குடியின மாணாக்கர்களுக்கு கல்வி உதவித்தொகை வழங்கப்படவுள்ளது.

எனவே, ஆர்வமுள்ள பழங்குடியின மாணவர்கள் https://overseas.tribal.gov.in/ மூலம் இணைய வழியில் விண்ணப்பிக்கலாம் என தெரிவிக்கப்பட்டுள்ளது. விண்ணப்பங்களை சமர்ப்பிக்க கடைசிநாள் (31.05.2024) எனவும், மேலும் விவரங்களுக்கு https://overseas.tribal.gov.in/ அமைச்சகத்தின் போர்ட்டலைப் பார்வையிடலாம் என்று குறிப்பிடப்பட்டுள்ளது.

Newsletter

கோவை விமான நிலையத்தில் வெடிகுண்டு மிரட்டல்: வதந்தி என உறுதி

கோவை விமான நிலையத்திற்கு நேற்று இரவு வெடிகுà...