சாதனை புரிந்தவர்களை கௌரவிக்கும் டென்சிங் நார்கே தேசிய சாகச விருதுக்கு விண்ணப்பிக்க கோவை ஆட்சியர் அழைப்பு

2023-ம் வருடத்திற்கான டென்சிங் நார்கே தேசிய சாகச விருதுக்கான விண்ணப்பத்தினை 31.05.2024ம் தேதிக்குள் இந்திய அரசுக்கு இணையதளத்திலேயே நேரடியாக பதிவேற்றம் செய்ய வேண்டும் என மாவட்ட ஆட்சித்தலைவர் கிராந்தி குமார் பாடி தெரிவித்துள்ளார்.



கோவை: கோவை மாவட்ட ஆட்சியர் கிராந்தி குமார் பாடி அண்மையில் வெளியிட்டுள்ள அறிக்கையில், இந்திய அரசு ஆண்டுதோறும் ஒருவருக்கு நிலம், நீர் (சமுத்திரம்) மற்றும் ஆகாயத்தில் சாகச விளையாட்டுகளில் சாதனை புரிந்தவர்களை கௌரவிக்கும் பொருட்டு 2023-ம் வருடத்திற்கான டென்சிங் நார்கே தேசிய சாகச விருது வழங்கி வருகிறது.

அதன்படி, 2023-ம் வருடத்திற்கான டென்சிங் நார்கே தேசிய சாகச விருதுக்கான விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன. மேற்காணும் இவ்விருதிற்கான விண்ணப்பம் இணையதள முகவரியான (http://awards.gov.in/) மூலம் இணையதளத்திலிருந்து பதிவிறக்கம் செய்ய வேண்டும். பின்னர் பூர்த்தி செய்யப்பட்ட விண்ணப்பத்தினை 31.05.2024ம் தேதிக்குள் இந்திய அரசுக்கு இணையதளத்திலேயே நேரடியாக பதிவேற்றம் செய்ய வேண்டும் என மாவட்ட ஆட்சித்தலைவர் கிராந்தி குமார் பாடி தெரிவித்துள்ளார்.

Newsletter

கோவை விமான நிலையத்தில் வெடிகுண்டு மிரட்டல்: வதந்தி என உறுதி

கோவை விமான நிலையத்திற்கு நேற்று இரவு வெடிகுà...