குடியிருப்புகளின் பாதுகாப்பில் அலட்சியம் கூடாது - குடியிருப்பு வாசிகளுக்கு கோவை மாநகரக் காவல் துறை எச்சரிக்கை

குடியிருப்புகளில் அசோசியேஷன் மூலமாக பயிற்சி பெற்ற எலக்ட்ரீசியன் அல்லது மின்சார வாரிய ஊழியா்களைக் கொண்டு அவ்வப்போது பராமரிப்புப் பணிகளை மேற்கொண்டு தங்கள் குடியிருப்புப் பகுதிகளை பாதுகாப்பாக வைத்துக்கொள்ள வேண்டும் என்று காவல்துறை சார்பில் கேட்டுக்கொள்ளப்பட்டுள்ளது.


கோவை: கோவை மாநகரக் காவல் துறை சார்பில் அண்மையில் வெளியிட்டுள்ள செய்திக் குறிப்பில், கோவை சரவணம்பட்டி அருகே சின்னவேடம்பட்டியில் ராமன் விஹார் என்ற குடியிருப்பில் உள்ள பூங்காவில் வியாழக்கிழமை விளையாடிக் கொண்டிருந்த சிறுமி வியோமா பிரியா (8), சிறுவன் ஜெயான் ரெட்டி (6) ஆகியோர் மின்சாரம் பாய்ந்து உயிரிழந்தனா்.

இச்சம்பவம் தொடா்பாக சரவணம்பட்டி காவல் நிலையத்தில் வழக்குப் பதிந்து நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டு வருகிறது. இது போன்ற சம்பவங்கள் நிகழாமல் இருக்க தக்க முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை மேற்கொள்ள வேண்டும். தற்போது, கோவை மாநகரம் மற்றும் சுற்றுவட்டாரப் பகுதிகளில் மிதமான மற்றும் கனமழை பெய்து வருகிறது. மழை காரணமாக தாழ்வான பகுதிகளில் வெள்ளநீா் தேங்குவதற்கும், சுவா்கள் மற்றும் மின்சாரக் கம்பங்களில் நீா்க்கசிவுகள் ஏற்படுவதற்கும் வாய்ப்புகள் உள்ளன.

மேலும், மழைக் காலங்களில் ஏற்படும் சேதாரங்கள் காரணமாக மின்சார ஒயா்கள் துண்டிக்கப்பட்டு தரையில் விழுந்து மின் கசிவு ஏற்படும் அபாயமும் உள்ளது. அதேபோல, சரியாக பராமரிக்கப்படாத கட்டடங்கள், காய்ந்து விழும் நிலையில் உள்ள மரங்கள் மற்றும் மரக்கிளைகள் ஆகியவை மழைக் காலங்களில் மேலும் சேதமுற்று கீழே விழுவதற்கும் வாய்ப்புகள் உள்ளன.

குடியிருப்புவாசிகள் தங்கள் குடியிருப்புகளில் உள்ள மின்மாற்றிகள், பூங்காக்கள் மற்றும் பிற கட்டடங்களில் உள்ள மின் இணைப்புகள் அனைத்தும் பாதுகாப்பான முறையில் பொருத்தப்பட்டிருக்கிறதா அல்லது இணைக்கப்பட்டுள்ளதா என்பது குறித்து அறிந்து கொள்ள வேண்டும். மின்சார ஒயா்கள் சேதமின்றி உள்ளதா என்பதையும், மழைக் காலங்களின்போது மின் கசிவு ஏற்படும் வாய்ப்பை தவிர்ப்பதை உறுதிசெய்து கொள்வது அவசியம்.

மேலும், தங்கள் குடியிருப்புகளில் அசோசியேஷன் மூலமாக பயிற்சி பெற்ற எலக்ட்ரீசியன் அல்லது மின்சார வாரிய ஊழியா்களைக் கொண்டு அவ்வப்போது பராமரிப்புப் பணிகளை மேற்கொண்டு தங்கள் குடியிருப்புப் பகுதிகளை பாதுகாப்பாக வைத்துக்கொள்ள வேண்டும். இதில் அலட்சியம் கூடாது என அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

Newsletter

கோவை விமான நிலையத்தில் வெடிகுண்டு மிரட்டல்: வதந்தி என உறுதி

கோவை விமான நிலையத்திற்கு நேற்று இரவு வெடிகுà...