கோவை சுங்கம் பார்க் டவுன் பகுதியில் வீட்டின் ஜன்னல் அருகே வைத்திருந்த நகை, பணம் திருட்டு

சுங்கம் பார்க் டவுன் பகுதியில் உள்ள உறவினர் வீட்டிற்கு வந்திருந்த சென்னையை சேர்ந்த ஹெலன் பத்மா ராணியின் பர்சில் வைத்திருந்த பணம் மற்றும் நகைத்தை திருடி சென்ற மர்ம நபரை போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.


கோவை: சென்னை, கிழக்கு தாம்பரம் பகுதியைச் சேர்ந்தவர் ஹெலன் பத்மா ராணி (வயது 63). இவர் நேற்று முன்தினம் கோவை ராமநாதபுரம், சுங்கம் பார்க் டவுன் பகுதியில் உள்ள உறவினர் வீட்டிற்கு வந்திருந்தார். அங்கு ஜன்னலில் தனது மணி பர்சை வைத்துவிட்டு தூங்கிவிட்டார்.

பின்னர், நேற்று மே.24 காலையில் எழுந்து பார்த்த போது ஜன்னலில் வைத்திருந்த பர்சை காணவில்லை. அதில் 4 பவுன் தங்க நகை, பணம் ரூ.14,000 இருந்தது. ஜன்னல் வழியாக கையை விட்டு பர்சை யாரோ திருடி சென்று விட்டனர். பின்னர் இதுகுறித்து ஹெலன் பத்மா ராணி ராமநாதபுரம் போலீசில் புகார் செய்துள்ளார். அதன்பேரில் போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

Newsletter

கோவை விமான நிலையத்தில் வெடிகுண்டு மிரட்டல்: வதந்தி என உறுதி

கோவை விமான நிலையத்திற்கு நேற்று இரவு வெடிகுà...