சரவணம்பட்டியில் மின்சாரம் தாக்கி இரு சிறுவர்கள் உயிரிழந்த சம்பவம்; மூவர் மீது வழக்கு பதிவு

கோவை சரவணம்பட்டியில் இரு சிறுவர்கள் மின்சாரம் தாக்கி உயிரிழந்தனர். சம்பவத்தின் காரணமாக மூன்று நபர்கள் மீது போலீசார் வழக்கு பதிவு செய்தனர்.


கோவை: கோவை சரவணம்பட்டி அடுத்த சின்னவேடம்பட்டியில், இந்திய ராணுவத்திற்கு சொந்தமான, 'ராமன் விஹார்' என்ற அடுக்குமாடி குடியிருப்பு உள்ளது. 

இங்குள்ள பூங்காவில், ஆந்திர மாநிலம், நெல்லுாரை சேர்ந்த பிரசாந்த் ரெட்டி மகன் ஜெயான் ரெட்டி, 6, நீலகிரி மாவட்டம், கோத்தகிரியை சேர்ந்த பாலசுந்தர் மகள் வியோமா பிரியா, 8, ஆகிய இருவர், கடந்த 23ம் தேதி சறுக்கு விளையாட்டில் ஈடுபட்டிருந்த போது, மின்சாரம் பாய்ந்து உயிரிழந்தனர். 

பாலசுந்தர் புகாரில் சரவணம்பட்டி போலீசார், வழக்கு பதிந்து விசாரித்தனர். அதில் அஜாக்கிரதையாக விபத்தை ஏற்படுத்தி, மரணம் விளைவித்தது தெரிந்து.

பின் குடியிருப்பின் எலக்ட்ரீஷியன் திண்டுக்கலை சேர்ந்த சிவா (29), ஒப்பந்ததாரர்கள் சரவணம்பட்டியை சேர்ந்த முருகன் (45), வடவள்ளியை சேர்ந்த சீனிவாசன் மீது 304 'ஏ' பிரிவின் கீழ் வழக்கு மே.25 பதிந்து விசாரிக்கின்றனர்.

Newsletter

கோவை விமான நிலையத்தில் வெடிகுண்டு மிரட்டல்: வதந்தி என உறுதி

கோவை விமான நிலையத்திற்கு நேற்று இரவு வெடிகுà...