போகம்பட்டியில் பாசக்கிணறு குட்டையில் மூழ்கி மூவர் உயிரிழப்பு

கோவை, சூலூர் அடுத்த போகம்பட்டியில் சட்டவிரோதமாக மண் அள்ளப்பட்ட குட்டையில் நீச்சல் தெரியாத ஒரே குடும்பத்தை சேர்ந்த மூவர் மூழ்கி உயிரிழந்தனர்.


கோவை: கோவை சூலூர், போகம்பட்டியை சேர்ந்த விஸ்வநாதன் மகன் மணிகண்டன் (40). இவரது மகள் தமிழ்ச்செல்வி(15). மணிகண்டனின் அண்ணன் மனோகரன் மகள் புவனா(13). நேற்று மே.26 மதியம் மூவரும் அப்பகுதி பாசக்கிணறு குட்டைக்கு குளிக்க சென்றுள்ளனர். அப்போது, நீச்சல் தெரியாததால் மூவரும் நீரில் மூழ்கி இறந்தனர். 

நீண்ட நேரமாகியும் அவர்கள் வீடு திரும்பாததால், புவனாவின் தாய் சரோஜாதேவி குட்டைக்கு சென்று பார்த்துள்ளார். குட்டையில் தமிழ்செல்வி சடலம் மிதப்பதை கண்டு அதிர்ச்சி அடைந்தார். 

சுல்தான்பேட்டை போலீசார் மற்றும் சூலுார் தீயணைப்பு நிலையத்துக்கு தகவல் தெரிவிக்கப்பட்டது. தீயணைப்பு வீரர்கள் சடலங்களை மீட்டனர். ஒரே குடும்பத்தை சேர்ந்த மூவர் நீரில் மூழ்கி பலியானது கிராம மக்களை அதிர்ச்சிக்குள்ளாக்கியது.

இங்குள்ள குட்டை யின் ஆழம் அதிகம் இருக்காது என்பது அந்த பகுதி மக்களுக்கு தெரியும். ஆனால், சில மாதங்களாக சட்டவிரோதமாக குட்டைகளில் மண் எடுப்பது அதிகரித்து உள்ளது. இந்த நிலையில், சமீபத்தில் பெய்த மழையால், குட்டையில் மழை நீர் தேங்கி உள்ளது. வழக்கமாக அந்த குட்டையில் ஆழம் இருக்காது என்ற எண்ணத்தில் மூவரும் இறங்கி குளித்துள்ளனர். ஆனால், குட்டையின் ஆழம் மற்றும் அவர்களுக்கு நீச்சல் தெரியாததால் பலியாகியுள்ளனர்.

சட்ட விரோதமாக மண் அள்ளிய கும்பல் மீது மாவட்ட நிர்வாகம் கடும் நடவடிக்கை எடுக்க, கிராம மக்கள் வலியுறுத்தியுள்ளனர் என்பது குறிப்பிடத்தக்கது.

Newsletter

கோவை விமான நிலையத்தில் வெடிகுண்டு மிரட்டல்: வதந்தி என உறுதி

கோவை விமான நிலையத்திற்கு நேற்று இரவு வெடிகுà...