உடுமலை அருகே சிலந்தி ஆற்றில் தடுப்பணை கட்டுவதற்கு எதிர்ப்பு - தாராபுரத்தில் விசிகவினர் ஆர்ப்பாட்டம்

அமராவதி அணையின் முக்கிய நீர் பிடிப்பு பகுதியான சிலந்தி ஆற்றின் குறுக்கே கேரளா அரசு தடுப்பணை கட்டுவதை உடனடியாக நிறுத்த வேண்டும் என்று விடுதலை சிறுத்தைகள் கட்சியின் விவசாய பாதுகாப்பு இயக்கம் சார்பில் தாராபுரம் அண்ணா சிலை அருகே கண்டன ஆர்ப்பாட்டம் நடைபெற்றது.


திருப்பூர்: திருப்பூர் மாவட்டம் உடுமலை அமராவதி அணை மூலம் பழைய மற்றும் புதிய ஆயக்கட்டு பாசன பகுதிகளில் நேரடியாக 55 ஆயிரம் ஏக்கர் பாசன நிலங்களும், மறைமுகமாக 25,000 ஏக்கர் நிலங்களும் பாசன வசதி பெறுகின்றன. மேலும் 110 குடிநீர் திட்டங்கள் மூலம் ஏராளமான பொது மக்கள் குடிநீர் தேவைக்காகவும் பயன்படுத்தி வருகின்றனர்.

இந்த நிலையில் அமராவதி அணையின் முக்கிய நீர் பிடிப்பு பகுதியான சிலந்தி ஆற்றின் குறுக்கே தற்சமயம் கேரளா அரசு குடிநீர் தேவைக்கு என தடுப்பணை கட்டி வருகின்றது. இதனால் அமராவதி அணைக்கு நீர்வரத்து பாதிக்கும் அபாயம் உள்ளது.



தடுப்பணை கட்டுவதற்கு கடும் எதிர்ப்பு தெரிவித்து விடுதலை சிறுத்தைகள் கட்சியின் விவசாய பாதுகாப்பு இயக்கம் சார்பில், விசிக கிழக்கு மாவட்ட செயலாளர் ஓவியர் மின்னல் தலைமையில் விவசாய பாதுகாப்பு இயக்க மாநில துணைச் செயலாளர் வேலு சிவகுமார் முன்னிலையில் தாராபுரம் அண்ணா சிலை அருகே கேரளா அரசை கண்டித்தும், மத்திய மோடி அரசை கண்டித்தும் ஆர்ப்பாட்டம் நடைபெற்றது.



இதில், தாராபுரம், உடுமலை, மடத்துக்குளம், கரூர் உள்ளிட்ட பகுதிகளிலிருந்து 100க்கும் மேற்பட்ட விசிகவினர், உழவர் உழைப்பாளர் கட்சி மற்றும் விவசாய அமைப்புகள் என பலர் கலந்துகொண்டனர்.

Newsletter

கோவையில் டெங்கு தடுப்பு: பள்ளி, கல்லூரிகளுக்கு சரிபார்ப்பு பட்டியல் வழங்கப்படும்

கோவை மாநகராட்சி 100 வார்டுகளில் டெங்கு தடுப்பு நடவடிக்கைகளை தீவிரப்படுத்தியுள்ளது. 28.08.2026 முதல் பள்ளிகள், கல்லூரிகள்...

கோவை மாநகராட்சி மத்திய மண்டலத்தில் டெங்கு கொசு ஒழிப்பு பணிகள் தீவிரம்

கோயம்புத்தூர் மாநகராட்சி மத்திய மண்டல பகுதிகளில் டெங்கு கொசு ஒழிப்பு பணிகள் தீவிரமாக மேற்கொள்ளப்பட்டு வருகின்றன. வார்டு...

கோவை பீளமேடு பகுதியில் டெங்கு ஒழிப்பு உள்ளிட்ட பல்வேறு பணிகளை ஆய்வு செய்த கவுன்சிலர்

சிங்காநல்லூர் சட்டமன்ற தொகுதி வார்டு 27 கவுன்சிலர் அம்பிகா தனபால் பீளமேடு பகுதிகளில் டெங்கு கொசு ஒழிப்பு, சாலை அமைப்பு,...

திருப்பூரில் அமராவதி, திருமூர்த்தி அணைகளில் நீர்மட்டம் உயர்வு

திருப்பூர் மாவட்டத்தில் அமராவதி அணையின் நீர்மட்டம் ஆகஸ்ட் 27ஆம் தேதி 59.22 அடியாக உயர்ந்துள்ளது. நீர் பிடிப்பு பகுதிகளில...

ஆழியாறு, பரம்பிக்குளம், சோலையாறு அணைகளில் நீர்மட்டம் உயர்வு

ஆனைமலை, பொள்ளாச்சி, வால்பாறை பகுதிகளில் உள்ள அணைகளில் தென்மேற்கு பருவமழை காரணமாக நீர்மட்டம் உயர்ந்துள்ளது. ஆழியாறு அணையி...

கோவையில் போட்டித் தேர்வு பயிற்சி வகுப்புகளுக்கு ஆசிரியர்கள் தேவை

கோவை மாவட்ட வேலைவாய்ப்பு மையத்தில் TNPSC, SSC, RRB, IBPS போன்ற போட்டித் தேர்வுகளுக்கான இலவச பயிற்சி வகுப்புகள் நடத்தப்பட...