புகையிலை தடுப்பு தினத்தை முன்னிட்டு கோவையில் பெண் குழந்தைகள் இல்லத்தில் விழிப்புணர்வு

போதை பொருட்களை ஒழித்தாலே குற்றங்கள் குறைய வாய்ப்புள்ளது. உடல் நலனும் நன்றாக இருக்கும். புகையிலை ஒழிப்பு தின விழிப்புணர்வு நிகழ்ச்சிகளை பள்ளிகளில் அதிகம் நடத்த இருப்பதாக கோவை மாநகர காவல் துறை ஆணையர் பாலகிருஷ்ணன் தெரிவித்துள்ளார்.


கோவை: புகையிலை மற்றும் போதை பொருட்கள் பயன்பாட்டால் உள்ள தீமைகள் குறித்த விழிப்புணர்வை இளம் மாணவ, மாணவிகளுக்கு ஏற்படுத்துவது தற்போது அவசியமாக இருப்பதாக கோவை மாநகர காவல் துறை ஆணையர் பாலகிருஷ்ணன் தெரிவித்துள்ளார்.



கோவையில் சில்ரன் சாரிடபுள் டிரஸ்ட், பெண் குழந்தைகள் இல்லத்தில் புகையிலை தடுப்பு தினத்தை முன்னிட்டு போதை பொருள் குறித்த விழிப்புணர்வு நிகழ்ச்சி நடைபெற்றது.



இதில் இல்லத்தில் வசிக்கும் குழந்தைகள் புகையிலை மற்றும் போதை பொருட்கள் பயன்பாட்டால் ஏற்படும் தீமைகள் குறித்தும், அதிலிருந்து வெளிவருவது குறித்தும் நாடகம் மற்றும் நடனங்கள் மூலமாக விழிப்புணர்வு ஏற்படுத்தப்பட்டது.

இதனை தொடர்ந்து நிகழ்ச்சியில் தலைமை விருந்தினராக கலந்து கொண்ட கோவை மாநகர காவல் துறை ஆணையர் பாலகிருஷ்ணன் பேசினார்.



அப்போது பேசிய அவர், தற்போது திரையரங்குகளில் திரைப்படத்திற்கு முன்பாக காட்சியிடும் புகையிலை பயன்பாட்டால் ஏற்படும் பாதிப்புகள் குறித்த காட்சியில் காட்டப்படும் படங்கள் மிகுந்த பயத்தை ஏற்படும் வகையில் இருப்பதாக சிலர் தெரிவிப்பதாக கூறினார்.

ஆனால் அது போன்ற பயத்தை ஏற்படும் காட்சிகளை சிறுவயது மாணவர்கள் பார்ப்பதால் புகையிலை பொருள் பயன்பாட்டால் ஏற்படும் தீமைகள் குறித்த விழிப்புணர்வு அதிகரிப்பதாக சுட்டி காட்டினார்.

போதை பொருள் மற்றும் புகையிலை பயன்பாட்டால் ஏற்பட்ட புற்றுநோயாளிகள் படும் துன்பங்களை நேரடியாக மருத்துவமனைக்கு அழைத்து சென்று மாணவர்கள் பார்ப்பது கூட ஒரு வகையில் விழப்புணர்வு ஏற்படுத்தும் என அவர் நம்பிக்கை தெரிவித்தார். போதை பொருட்களை ஒழித்தாலே குற்றங்கள் குறைய வாய்ப்புள்ளதாக கூறிய அவர், போதை பொருட்கள் பழக்கம், அதனை தொடர்ந்து குற்ற செயல்களில் ஈடுபடுவது என ஒன்றோடு ஒன்று தொடர்புள்ளதை சுட்டி காட்டிய அவர், போதை பொருட்களை ஒழித்தாலே குற்றம் குறைவதோடு உடல் நலனும் நன்றாக இருக்கும் என கூறினார். புகையிலை ஒழிப்பு தின விழிப்புணர்வு நிகழ்ச்சிகளை பள்ளிகளில் அதிகம் நடத்த இருப்பதாகவும் அவர் கூறினார்.

நிகழ்ச்சியில், ஆஸ்ரம் மெட்ரிக் பள்ளி நிர்வாகி கௌரி உதயந்திரன், மருத்துவர்கள் ஹேமா, விஷ்ணு மற்றும் கோவை புதூர் குடியிருப்பு நல சங்க நிர்வாகிகள் ஜீவானந்தம், குணசீலன் மற்றும் குழந்தைகள் நலக் குழு உறுப்பினர்கள் உட்பட பலர் கலந்து கொண்டனர்.

Newsletter

மேட்டுப்பாளையம் துணை மின் நிலையத்தில் நாளை (29.08.2026) மின்தடை

மேட்டுப்பாளையம் துணை மின் நிலையத்தில் மாதாந்திர பராமரிப்பு பணிகள் நாளை (29.08.2026) காலை 9 மணி முதல் மாலை 5 மணி வரை நடைப...

பசூர் துணை மின் நிலையத்தில் நாளை (29.08.2026) மின்தடை

பசூர் துணை மின் நிலையத்தில் நாளை ஆகஸ்ட் 29 அன்று காலை 9 மணி முதல் மாலை 5 மணி வரை மாதாந்திர மின் பராமரிப்பு பணி நடைபெறும்...

அன்னூர் துணை மின் நிலையத்தில் நாளை (29.08.2026) மின்தடை

அன்னூர் துணை மின் நிலையத்தில் நாளை (29.08.2026) காலை 9 மணி முதல் மாலை 5 மணி வரை மாதாந்திர பராமரிப்புப் பணிகள் நடைபெறும்....

கோவை டாடாபாத் துணை மின் நிலையத்தில் நாளை (29.08.2026) மின்தடை

கோவை டாடாபாத் துணை மின் நிலையத்தில் ஆகஸ்ட் 29 அன்று காலை 9 மணி முதல் மாலை 5 மணி வரை மாதாந்திர மின் பராமரிப்பு பணிகள் நடை...

சூலூர் துணை மின் நிலையத்தில் நாளை (29.08.2026) மின்தடை

சூலூர் துணை மின் நிலையத்தில் மாதாந்திர பராமரிப்பு பணிகள் நாளை (29.08.2026) காலை 9 முதல் மாலை 5 வரை நடைபெறும். டி.எம். நக...

Mayor Inaugurates Special Camp for Persons with Disabilities in Coimbatore

A special camp for persons with disabilities was inaugurated and inspected by Mayor Ranganayaki Ramachandran at Kaumara...