ராணுவத்தில் அக்னிவீா் வாயு தேர்வுக்கு விண்ணப்பிக்க கோவை மாவட்ட ஆட்சியர் அழைப்பு

பெங்களூரில் உள்ள 7வது ஏா் மேன் தோ்வு மையத்தில் அக்னிவீா் வாயு (இசைக் கலைஞா்) தோ்வுக்கு, இந்திய ராணுவத்தால் ஜூலை 3 முதல் 12 ஆம் தேதி வரை ஆள்சோ்ப்பு முகாம் நடைபெற உள்ளது என்று கோவை மாவட்ட ஆட்சியர் தெரிவித்துள்ளார்.



கோவை: கோவை மாவட்ட ஆட்சியர் கிராந்தி குமார் பாடி அண்மையில் வெளியிட்டுள்ள அறிக்கையில், அக்னிவீா் வாயு (இசைக் கலைஞா்) தோ்வுக்கு பெங்களூரில் உள்ள 7-ஆவது ஏா் மேன் தோ்வு மையத்தில் இந்திய ராணுவத்தால் ஜூலை.3 முதல் 12-ஆம் தேதி வரை ஆள்சோ்ப்பு முகாம் நடைபெற உள்ளது.

இதற்கு 10ஆம் வகுப்பு தோ்ச்சி பெற்றிருக்க வேண்டும். ஏதாவது ஒரு இசைக் கருவியை இசைக்கத் தெரிந்திருக்க வேண்டும். 2004 ஜனவரி முதல் 2007 ஜூலை இடையே பிறந்த விண்ணப்பதாரா்கள் விண்ணப்பிக்க தகுதியுடையவா்கள்.

மேற்கண்ட தகுதியுடைய ஆண் மற்றும் பெண் இருபாலரும் இத்தோ்வுக்கு இணையதளத்தின் மூலமாக மே.22 முதல் ஜூன்.5ஆம் தேதி வரை https://agnipathvayu.cdac.in என்ற இணையதளத்தில் மட்டுமே விண்ணப்பிக்கலாம் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

Newsletter

கோவை விமான நிலையத்தில் வெடிகுண்டு மிரட்டல்: வதந்தி என உறுதி

கோவை விமான நிலையத்திற்கு நேற்று இரவு வெடிகுà...