கோவையில் பொதுமக்களுக்கு இடையூறாக சுற்றித்திரிந்த வீடில்லா நாய்களுக்கு கருத்தடை செய்யப்பட்டுள்ளதாக மாநகராட்சி ஆணையாளர் விளக்கம்

நாய்களுக்கு கழுத்து பட்டை, கழுத்து கச்சை மற்றும் வாய்பகுதியில் அணியக் கூடிய முகமூடி இல்லாமல் அழைத்து வரக் கூடாது. பொது வெளியில் கட்டி போடுதல் அல்லது தன்னிச்சையாக வெளியில் விடுவது போன்ற செயல்பாடுகளை தவிர்க்கும்படி வளர்ப்பு நாய் வைத்திருப்பவர்களுக்கு கோவை மாநகராட்சி ஆணையாளர் அறிவுறுத்தியுள்ளார்.


கோவை: கோயம்புத்தூர் மாநகராட்சி ஆணையாளர் மா.சிவகுரு பிரபாகரன் செய்திக்குறிப்பு ஒன்றை வெளியிட்டுள்ளார். அதில் கூறப்பட்டுள்ளதாவது, கோயம்புத்தூர் மாநகராட்சி 100 வார்டுகளுக்குட்பட்ட பகுதிகளில் பொதுமக்களுக்கும், போக்குவரத்துக்கும் இடையூறாக சுற்றித்திரியும் வீடில்லா நாய்களின் இனப்பெருக்கத்தை கட்டுப்படுத்தும் விதமாக 2023 ஏப்ரல் முதல் நாளது வரை வடக்கு மண்டலத்தில் 1572 நாய்கள், தெற்கு மண்டலத்தில் 1211 நாய்கள், கிழக்கு மண்டலத்தில் 1281 நாய்கள், மேற்கு மண்டலத்தில் 1544 நாய்கள் மற்றும் மத்திய மண்டலத்தில் 4026 நாய்கள் என 9634 வீடில்லா நாய்கள் பிடிக்கப்பட்டு கருத்தடையும் மற்றும் வெறிநோய் தடுப்பூசியும் செலுத்தப்பட்டு பிடிக்கப்பட்ட இடத்திலிலேயே விடப்பட்டுள்ளன.

மேலும், மாநகராட்சிக்குட்பட்ட பகுதிகளிலுள்ள வீடுகளில் வளர்க்கும் வளர்ப்பு நாய்களினால் ஏற்படும் பாதிப்புகளை குறைக்கும் வகையில் உரிய பாதுகாப்பு நெறிமுறைகளை பின்பற்றி இனிவரும் காலங்களில் பொது வெளியில் அழைத்து வரும் வளர்ப்பு நாய்களுக்கு கட்டாயம் கழுத்து பட்டை (Dog Neck Collar), கழுத்து கச்சை (Belt) மற்றும் வாய்பகுதியில் அணியக் கூடிய முகமூடி (Dog muzzle) அணிவிக்கப்பட வேண்டுமென மாநகராட்சி சார்பாக கேட்டுக் கொள்ளப்படுகிறது.

ஏற்கனவே மாநகராட்சி பகுதிகளில் சாலை போக்குவரத்து மற்றும் பொதுமக்களுக்கு இடையூறாக சுற்றித்திரிந்த மாடுகள் பிடிக்கப்பட்டு சம்மந்தப்பட்ட மாட்டின் உரிமையாளர்களுக்கு அபராதம் விதிக்கப்பட்டுள்ளது. அதன்படி, கிழக்கு மண்டலத்தில் 10 மாடுகளுக்கு ரூ.79,000/-ம், மேற்கு மண்டலத்தில் 31 மாடுகளுக்கு ரூ.1,68,500/-ம், வடக்கு மண்டலத்தில் 1 மாட்டிற்கு ரூ.5000/-ம், தெற்கு மண்டலத்தில் 45 மாடுகளுக்கு ரூ.3,99,500/-ம் மற்றும் மத்திய மண்டலத்தில் 53 மாடுகளுக்கு ரூ.4,43,000/ம் என மொத்தம் 140 மாடுகளுக்கு ரூ.10,95,000/-ம் அபராதம் விதிக்கப்பட்டுள்ளது. இதனுடன் தலா ஒரு குதிரை மற்றும் ஆடு பிடிக்கப்பட்டு முறையே ரூ.5000/-ம் மற்றும் ரூ.1000/-ம் அபராதமும் விதிக்கப்பட்டுள்ளது.

நாய்களுக்கு கழுத்து பட்டை (Dog Neck Collar), கழுத்து கச்சை (Belt) மற்றும் வாய்பகுதியில் அணியக் கூடிய முகமூடி (Dog muzzle) இல்லாமல் அழைத்து வரக் கூடாது எனவும், பொது வெளியில் கட்டி போடுதல் அல்லது தன்னிச்சையாக வெளியில் விடுவது போன்ற செயல்பாடுகளை முற்றிலும் தவிர்க்கும்படியும் வளர்ப்பு நாய்கள் வைத்திருப்பவர்களுக்கு இதன் மூலம் அறிவுறுத்தப்படுகிறது. சாலைகளில் சுற்றித்திரியும் கால்நடைகள் மற்றும் வீட்டில் வளர்க்கப்படும் கால்நடைகளால் ஏற்படும் இடையூறுகள் குறித்து புகார் அளிக்க 0422-2390262, 0422 2302323, 9443799242 ஆகிய தொலைபேசி எண்களிலும், 8190000200 என்ற வாட்ஸ்ஆப் எண்ணிலும் தொடர்பு கொண்டு புகார் அளிக்கலாம் என மாநகராட்சி ஆணையாளர் மா.சிவகுருபிரபாகரன் தெரிவித்துள்ளார்.

Newsletter

கோவை விமான நிலையத்தில் வெடிகுண்டு மிரட்டல்: வதந்தி என உறுதி

கோவை விமான நிலையத்திற்கு நேற்று இரவு வெடிகுà...