தாராபுரத்தில் சிறுமிக்கு பாலியல் தொல்லை - போக்சோவில் இரண்டு சிறுவர்கள் கைது

தாராபுரத்தில் நட்பாக பழகி பள்ளி சிறுமிக்கு பாலியல் தொல்லை கொடுத்த இரண்டு சிறுவர்களை காவல்துறையினர் போக்சோவில் கைது செய்து சிறார் மையத்தில் சேர்த்துள்ளனர்.


திருப்பூர்: திருப்பூர் மாவட்டம் தாராபுரத்தில் 14,வயது சிறுமிக்கு, 3 மாதமாக பல விதங்களால் பாலியல் தொல்லை கொடுத்த, இரண்டு சிறுவர்கள் போக்சோவில் கைது செய்யப்பட்டனர்.

தாராபுரம் மாரியம்மன் கோவில் தெருவை சேர்ந்த சிறுவனும், காமராஜபுரம் பகுதியைச் சேர்ந்த சிறுவனும், சிறுமியுடன் நட்பாக பழகி வந்துள்ளனர்.

இந்த நிலையில் இரண்டு சிறுவர்களும் சேர்ந்து 14 வயது சிறுமிக்கு பாலியல் தொந்தரவு கொடுத்துள்ளனர். இதுகுறித்து சிறுமி தன் தாயாரிடம் கூறவே தாயார் அரசு மருத்துவமனைக்கு அழைத்துச் சென்று அங்கு மருத்துவ பரிசோதனை செய்துள்ளார். அப்போது அரசு மருத்துவர்கள் தாராபுரம் அனைத்து மகளிர் காவல் நிலையத்திற்கு தகவல் தெரிவித்தனர் தகவலின் பெயரில் அனைத்து மகளிர் காவல் ஆய்வாளர் செல்லம் நேரில் வந்து சிறுமியிடம் விசாரணை நடத்தினார்.

அப்போது இரண்டு சிறுவர்களும் தனக்கு பாலியல் ரீதியில் தொந்தரவு கொடுத்ததாக சிறுமி தெரிவித்தார். இதனை அடுத்து சிறுவர்கள் இருவரையும் கைது செய்த ஆய்வாளர் செல்லம், இருவரும் சிறுவர்களாக இருப்பதால் அவர்கள் இருவரையும் திருப்பூரில் உள்ள சிறார் மையத்திலும் சேர்த்தனர்.

சிறுமியை மருத்துவமனையில் சேர்த்து, சிகிச்சை அளிக்க போலீசார் முடிவு செய்துள்ளனர். இதுதொடர்பாக அரசின் குழந்தைகள் பாதுகாப்பு அதிகாரிகளும் விசாரித்து வருகின்றனர்.

Newsletter

கோவை விமான நிலையத்தில் வெடிகுண்டு மிரட்டல்: வதந்தி என உறுதி

கோவை விமான நிலையத்திற்கு நேற்று இரவு வெடிகுà...