கோவை காந்திபுரம் சிக்னலில் போக்குவரத்து விதிமீறல் மற்றும் சைபர் கிரைம் குறித்து பொதுமக்களுக்கு விழிப்புணர்வு

18 வயது ஆகாமல் பெற்றோர்கள் தங்கள் பிள்ளைகளுக்கு வாகனங்கள் வாங்கி தரக்கூடாது. ஓட்டுநர் உரிமம் பெற்ற பிறகு வாகனம் வாங்கி தர வேண்டும். இல்லை என்றால் பெற்றோர்கள் மீது கடுமையாக நடவடிக்கை எடுக்கப்படும் என்று கோவை மாநகர் காவல் ஆணையர் பாலகிருஷ்ணன் எச்சரிக்கை விடுத்துள்ளார்.


கோவை: கோவை காந்திபுரம் சிக்னலில் போக்குவரத்து விதிமீறல் மற்றும் சைபர் கிரைம் குறித்து இன்று வியாழக்கிழமை மதியம் 12 மணியளவில் பொதுமக்களுக்கு விழிப்புணர்வு நிகழ்ச்சி நடைபெற்றது.

இதில் கோவை மாநகர் ஆணையர் பாலகிருஷ்ணன், போக்குவரத்து துணை ஆணையர் ரோஹித் மற்றும் காவல்துறை அதிகாரிகள் கலந்து கொண்டனர்.



நிகழ்ச்சியில் பொதுமக்களுக்கு விழிப்புணர்வு ஏற்படுத்தும் வகையில் மேஜிக் ஷோ நடத்தி விழிப்புணர்வு ஏற்படுத்தப்பட்டது.



முகத்தில் கருப்பு துணியை கட்டிக்கொண்டு தலைக்கவசம் அணிந்து மேஜிசியன் தயா வாகனத்தை ஓட்டி தலைக்கவசம் அணிவது கட்டாயம், மது அருந்தி வாகனத்தை ஓட்டக்கூடாது என்று காந்திபுரத்தில் இருந்து ஆர்.எஸ்.புரம் வரை விழிப்புணர்வு செய்தார்.



அதனைத்தொடர்ந்து செய்தியாளர்களை சந்தித்து பேசிய கோவை மாநகர் காவல் ஆணையர் பாலகிருஷ்ணன், கண்ணைக் கட்டிக் கொண்டு கூட வாகனம் ஓட்டலாம், ஆனால் ஹெல்மெட் அணியாமல், மது அருந்திவிட்டு வாகனங்கள் ஒட்டக்கூடாது என்று பொதுமக்களுக்கு அறிவுரை வழங்கினார். ஹெல்மெட் அணியாமலும், சீட் பெல்ட் போடாமல் வாகனம் ஓட்டினால் நமது உயிர் நமது கையில் இல்லை என்று கூறினார்.

தற்போது இளைஞர்கள் அதிக அளவில் மது அருந்திவிட்டு வாகனங்களை ஓட்டு வருகிறார்கள். 18 வயது ஆகாமல் பெற்றோர்கள் தங்கள் பிள்ளைகளுக்கு வாகனங்கள் வாங்கி தரக்கூடாது. ஓட்டுநர் உரிமம் பெற்ற பிறகு வாகனம் வாங்கி தர வேண்டும், இல்லை என்றால் பெற்றோர்கள் மீது கடுமையாக நடவடிக்கை எடுக்கப்படும் என்று எச்சரித்தார்.

கோவை மாநகரில் சோதனைச்சாவடிகளில் சிசிடிவி கேமராக்கள் மூலம் விதிகளை மீறுபவர்கள் மீது நடவடிக்கை எடுக்கப்பட்டு வருகிறது. போக்குவரத்து விதிகளை தொடர்ந்து மீறுபவர்கள் மீது வாகனத்தை இயக்க முடியாத அளவில் மேற்கொள்ள வேண்டிய நடவடிக்கை என்னென்ன என்பது குறித்து ஆலோசனை செய்து வருவதாக கூறினார்.

தனியார் கேஎம்சிஎச் மருத்துவமனையில் திருட முயற்சித்ததாக ஒருவர் அடித்து கொலை செய்யப்பட்ட விவகாரம் தொடர்பான கேள்விக்கு, புலன் விசாரணை தொடர்ந்து நடைபெற்று வருகிறது. சம்பவத்தின் போது அந்த பகுதியில் வந்தவர்கள் தொடர்புடையவர்கள் விசாரணை மேற்கொள்ளப்பட்டு வருவதுடன் சிசிடிவி காட்சிகளை சோதனை செய்து வருகிறோம். நேரடியாக வாகன தணிக்கையின் போது போதைப்பொருள் பயன்படுத்துகிறார்களா? என்ற கோணத்திலும் சோதனை செய்யப்படுகிறது என தெரிவித்தார்.

Newsletter

கோவை விமான நிலையத்தில் வெடிகுண்டு மிரட்டல்: வதந்தி என உறுதி

கோவை விமான நிலையத்திற்கு நேற்று இரவு வெடிகுà...