கோவை டிவிஎஸ் நகர் ரோட்டில் அரசு ஊழியர் மீது தாக்குதல் - காவல்துறை விசாரணை

வழிவிடுவதில் ஏற்பட்ட தகராறில் அரசு போக்குவரத்து கழகத்தில் டிராபிக் கண்ட்ரோலராக பணியாற்றும் தீபக் வில்சன் என்பவர் மீது காரில் வந்தவர்கள் தாக்குதல் நடத்தியுள்ளனர். இதுகுறித்து காவல்துறையினர் விசாரணை நடத்தி வருகின்றனர்.


கோவை: கோவை விளாங்குறிச்சி சேரன்மாநகரை சேர்ந்தவர் தீபக் வில்சன் (41). அரசு போக்குவரத்து கழகத்தில் டிராபிக் கண்ட்ரோலராக வேலை பார்த்து வருகிறார். இவர் நேற்று மே.30 தனது நண்பர் பொன்நிலவன் என்பவருடன் பைக்கில் கணுவாயில் இருந்து கோவை நோக்கி வந்து கொண்டிருந்தார்.

அப்போது டிவிஎஸ் நகர் ரோட்டில் சென்றபோது, பின்னால் வந்த கார் அவர்களை முந்தி செல்ல முயன்றது. இதில் வழிவிடுவதில், காரில் வந்தவர்களுக்கும், தீபக் வில்சனுக்கும் இடையே தகராறு ஏற்பட்டது. அப்போது காரில் இருந்து இறங்கி வந்த 5 பேர் தகாத வார்த்தைகளால் பேசி தீபக் வில்சனை தாக்கி விட்டு தப்பிச்சென்றனர்.

பின்னர் இதுகுறித்து அவர் கவுண்டம்பாளையம் போலீஸ் நிலையத்தில் புகார் அளித்தார். அதன் பேரில் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரித்து வருகின்றனர். மேலும் அப்பகுதியில் உள்ள சிசிடிவி கேமரா காட்சிகளை கைப்பற்றி ஆய்வு செய்து வருகின்றனர்.

Newsletter

கோவை விமான நிலையத்தில் வெடிகுண்டு மிரட்டல்: வதந்தி என உறுதி

கோவை விமான நிலையத்திற்கு நேற்று இரவு வெடிகுà...