இஸ்ரேலின் அடாவடியை கண்டித்து உக்கடம் பேருந்து நிலையம் அருகில் எஸ்டிபிஐ கட்சியினர் ஆர்ப்பாட்டம்

பாலஸ்தீன மக்கள் மீதான தாக்குதலை நிறுத்தக்கோரியும், இஸ்ரேல் உடனான இந்தியாவின் உறவை முறிக்க வலியுறுத்தியும் எஸ்டிபிஐ கட்சியினர் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.


கோவை: பாலஸ்தீனில் ரஃபா நகரில் தாக்குதலை நடத்தி வரும் இஸ்ரேலை கண்டித்தும், பாலஸ்தீன மக்களை உலக நாடுகள் பாதுகாக்க நடவடிக்கை எடுக்க வலியுறுத்தியும், போர் குற்றங்களை புரியும் அடாவடி இஸ்ரேல் மீது தடை விதிக்கவும், இஸ்ரேல் உடனான இந்தியாவின் உறவை முறிக்க வலியுறுத்தியும் எஸ்டிபிஐ கட்சியின் சார்பில் தமிழகம் முழுவதும் பல்வேறு இடங்களில் ஆர்ப்பாட்டம் நடத்தினர்.



இந்த நிலையில் கோவை உக்கடம் பேருந்து நிலையம் அருகில் எஸ்டிபிஐ கட்சியின் மாவட்ட துணை தலைவர் அப்துல் ரஹிம் தலைமையில் நடைபெற்ற இந்த ஆர்ப்பாட்டத்தில் எஸ்டிபிஐ கட்சியின் மாநில பேச்சாளர் V.M. அபுத்தாஹிர் சிறப்பு அழைப்பாளராக கலந்து கொண்டு கண்டன உரையாற்றினார்.



இதில் மாவட்ட தலைவர் முஸ்தபா, பொதுச்செயலாளர் அப்துல் காதர், வர்த்தக அணி மாநில செயலாளர் அப்துல் கரீம் முகமது இசாக், மாவட்ட பொருளாளர் முகமது இக்பால், மாவட்டச் செயலாளர் மன்சூர், மாவட்ட துணை தலைவர் சிவக்குமார், விமன் இந்தியா மூவ்மென்ட் தலைவி காமிலா பேகம், மாவட்ட வர்த்தக அணி தலைவர் இப்ராஹிம், மாவட்ட தொழிற்சங்க தலைவர் செய்யது ஆகியோர் முன்னிலை வகித்தனர்.



எஸ்டிபிஐ கட்சியின் தொண்டர்கள், பெண்கள் குழந்தைகள் உள்ளிட்ட நூற்றுக்கும் மேற்பட்டோர் கலந்து கொண்டு இஸ்ரேலின் அடாவடிக்கு எதிராகவும், பாலஸ்தீன் மக்களுக்கு ஆதரவாகவும் முழக்கமிட்டனர்.

Newsletter

கோவை விமான நிலையத்தில் வெடிகுண்டு மிரட்டல்: வதந்தி என உறுதி

கோவை விமான நிலையத்திற்கு நேற்று இரவு வெடிகுà...