கோவையில் இருந்து சார்ஜா செல்லும் ஏர் அரேபியா விமானத்தில் கோளாறு - பயணிகள் அவதி

கோவையில் இருந்து இன்று காலை 4.15 மணிக்கு ஏர் அரேபியா விமானம், சார்ஜா செல்வதற்காக ஓடுதளத்தில் இருந்து புறப்பட தயரானது. அப்போது, விமானத்தின் ஒரு டயர் பஞ்சரானதால், பயணிகள் அனைவரும் அவசரமாக தரையிறக்கப்பட்டு ஓட்டலில் தங்க வைக்கப்பட்டனர்.


கோவை: கோவை விமான நிலையத்தில் இருந்து சிங்கப்பூர், துபாய், சார்ஜா உள்ளிட்ட வெளிநாடுகளுக்கும், மும்பை, சென்னை, கொல்கத்தா, டெல்லி உள்ளிட்ட உள்ளிட்ட நகரங்களும் தினமும் ஏராளமான விமானங்கள் இயக்கப்பட்டு வருகின்றன.

அதன்படி, வழக்கம்போல இன்று ஜூன்.1 காலை 4:15 மணிக்கு சார்ஜா செல்லக்கூடிய ஏர் அரேபியா விமானம் 145 பயணிகளுடன் ஓடுதளத்தில் புறப்பட தயாரானது. அப்போது விமானத்தின் ஒரு டயர் பஞ்சராகி இருப்பது தெரியவந்தது. இதனால் விமானத்தில் இருந்து அனைத்து பயணிகளும் அவசரமாக தரையிறக்கப்பட்டனர்.

பின்னர் அவர்கள் கோவை பீளமேட்டில் உள்ள தனியார் ஓட்டலில் தங்க வைக்கப்பட்டனர். இதைத்தொடர்ந்து விமானத்தின் கோளாறு சரி செய்த பின்னர் மாலை 6 மணிக்கு விமானம் புறப்படும் என அதிகாரிகள் தெரிவித்துள்ளனர். இதன் காரணமாக விமான பயணிகள் பெரும் அவதி அடைந்தனர்.

Newsletter

கோவை விமான நிலையத்தில் வெடிகுண்டு மிரட்டல்: வதந்தி என உறுதி

கோவை விமான நிலையத்திற்கு நேற்று இரவு வெடிகுà...