உருமாண்டம்பாளையம் அருகே பயணிகள் ரயில் மோதியதில் மூதாட்டி பலி

உருமாண்டம்பாளையம் அருகே மேட்டுப்பாளையத்தில் இருந்து கோவை சென்ற பயணிகள் ரயில் மோதியதில் பேபி என்ற மூதாட்டி பரிதாபமாக உயிரிழந்தார். உடலை கைப்பற்றி ரயில்வே போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.


கோவை: கோவை உருமாண்டம்பாளையத்தை சேர்ந்தவர் பேபி(65). இன்று ஜூன்.1 காலையில் தனது வீட்டில் இருந்து நடை பயிற்சி சென்று விட்டு மீண்டும் வீடு திரும்பியுள்ளார்.

அப்போது வீட்டின் அருகே மேட்டுப்பாளையத்தில் இருந்து கோவை சென்ற பயணிகள் ரயில் மோதியதில் பலியானார்.

இதுகுறித்து அறிந்த ரயில்வே போலீசார் விரைந்து சென்று சடலத்தை மீட்டு மேட்டுப்பாளையம் அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். பின்னர் இது குறித்து வழக்குப்பதிவு செய்து விசாரித்து வருகின்றனர்.

Newsletter

கோவை விமான நிலையத்தில் வெடிகுண்டு மிரட்டல்: வதந்தி என உறுதி

கோவை விமான நிலையத்திற்கு நேற்று இரவு வெடிகுà...