கோவை வடவள்ளி அருகே தந்தையை அரிவாளால் வெட்டிய மகன் கைது

பின்னர் இது குறித்த புகாரின் பேரில், வடவள்ளி போலீசார் கொலை முயற்சி வழக்குபதிவு செய்து அரவிந்தை கைது செய்தனர். மேலும் அவரை கோர்ட்டில் ஆஜர்படுத்தி சிறையில் அடைத்தனர்.


Coimbatore: கோவை வடவள்ளி குருசாமி நகர் நவாவூர் பிரிவை சேர்ந்தவர் குணசேகரன்(62). இவரது மகன் அரவிந்த்(30) டிரைவர். இவருக்கு குடிப்பழக்கம் உள்ளது. அடிக்கடி மது குடித்து விட்டு வந்ததாக தெரிகிறது. இதனை குணசேகரன் கண்டித்தார். ஆனாலும் அவர் மது குடிப்பதை நிறுத்தாமல் தொடர்ந்து வந்துள்ளார். 

இந்நிலையில், நேற்று ஜூன்.1 இது தொடர்பாக தந்தை, மகன் இடையே மீண்டும் தகராறு ஏற்பட்டது. இதில் ஆத்திரமடைந்த அரவிந்த் வீட்டில் இருந்த அரிவாளால் குணசேகரனை வெட்டினார்.

இதில் அவருக்கு தலை, காது உள்ளிட்ட இடங்களில் வெட்டு விழுந்தது. வலியால் துடித்த அவரை அங்கிருந்தவர்கள் மீட்டு கோவை அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்.

பின்னர் இது குறித்த புகாரின் பேரில், வடவள்ளி போலீசார் கொலை முயற்சி வழக்குபதிவு செய்து அரவிந்தை கைது செய்தனர். பின்னர் அவரை கோர்ட்டில் ஆஜர்படுத்தி சிறையில் அடைத்தனர்.

Newsletter

காரமடையில் 5 கிலோ கஞ்சா பறிமுதல்; ஒடிசாவைச் சேர்ந்த இருவர் கைது

கோவை மாவட்டம் காரமடை பகுதியில் பதுக்கி வைக்கப்பட்டிருந்த 5 கிலோ கஞ்சாவை போலீசார் பறிமுதல் செய்து, ஒடிசா மாநிலத்தைச் சேர்...

வன்னியர்களுக்கு தனி இடஒதுக்கீடு அறிவித்தால், 251 சமூகங்கள் எதிர்க்கும்: ஓபிசி மக்கள் உரிமைகள் கட்சி

வன்னியர் சமூகத்திற்கான தனி இடஒதுக்கீட்டை தமிழக அரசு அறிவித்தால், மாநிலம் முழுவதும் 251 பிற்படுத்தப்பட்ட மற்றும் மிகவும்...

நிலம் அளவீடு செய்யாததால், பட்டா வழங்கியும் குடியிருக்க முடியாமல் அவதி- ஆட்சியரிடம் 330 குடும்பங்கள் மனு

ஆதிதிராவிடர் நலத்துறை சார்பில் இலவச வீட்டு மனைப் பட்டா வழங்கப்பட்டு ஓராண்டு கடந்தும், தங்களுக்கு ஒதுக்கப்பட்ட நிலங்கள் அ...

கோவையில் ஜூன் 19ல் தனியார் வேலைவாய்ப்பு முகாம் நடைபெறுகிறது

கோயம்புத்தூர் மாவட்ட வேலைவாய்ப்பு மற்றும் தொழில்நெறி வழிகாட்டும் மையத்தில் ஜூன் 19, 2026 அன்று தனியார் துறை வேலைவாய்ப்பு...

கோவையில் கல்லூரி மாணவரை சிறை வைத்து தாக்கி நகை, பைக் பறிப்பு

குனியமுத்தூரில் புதிய வாடகை அறை பார்க்கச் சென்ற கல்லூரி மாணவரை அறைக்குள் அடைத்து வைத்து கத்தி, இரும்புக் கம்பியால் தாக்க...

கோவை அரசு மருத்துவமனையில் சிகிச்சையில் இருந்த கொலை வழக்குக் கைதி உயிரிழப்பு

கோவை அரசு மருத்துவமனையில் போலீஸ் பாதுகாப்புடன் சிகிச்சை பெற்று வந்த கொலை வழக்கில் தண்டனை பெற்ற கைதி மணிகண்டன் உயிரிழந்த...