தமிழகம் மற்றும் கோவையில் கோடை விடுமுறை முடிந்த நிலையில் பள்ளிகள் திறப்பு

கோடை விடுமுறை முடிந்து தமிழகம் மற்றும் கோவையில் அரசு, அரசு உதவி பெறும் மற்றும் தனியார் பள்ளிகள் இன்று திறந்தன. பல பள்ளிகளில் ஆசிரியர்கள் மேளதாளம் வாசித்து வரவேற்பு அளித்தனர்.


கோவை: தமிழகத்தில் கோடை விடுமுறைக்குப்பின் வழக்கமாக ஜூன் 1ல் பள்ளிகள் திறக்கப்படுவது வழக்கம். ஆனால் இந்தாண்டு ஜூன் 4ம் தேதி நாடாளுமன்றத் தேர்தல் முடிவுகள் வெளியானதால் பள்ளிகள் திறப்பு தள்ளிப்போனது.

மேலும், தமிழகத்தின் வடக்கு மாவட்டங்களில் வெயிலின் தாக்கம் அதிகரித்திருந்ததாலும், ஜூன்.10ஆம் தேதி பள்ளிகள் திறக்கப்படும் என பள்ளிக்கல்வித்துறை அறிவித்திருந்தது.

தமிழகம் முழுவதும் அரசு, அரசு உதவி பெறும் மற்றும் தனியார் பள்ளிகள் என 20ஆயிரத்திற்கும் மேற்பட்ட பள்ளிகளில் லட்சக்கணக்கான மாணவர்கள் படிக்கின்றனர். அவர்களுக்கு கோடை விடுமுறைக்குப் பின்னர் இன்று பள்ளிகள் திறக்கப்பட்டன.



கோவையில் பல்வேறு பள்ளிகளிலும், மாணவர்களை வரவேற்க ஆசிரியர்கள் கலை நிகழ்ச்சிகளை ஏற்பாடு செய்திருந்தனர். நீண்ட இடைவெளிக்குப்பின் நண்பர்களை சந்திக்கப்போகும் குஷியின் மாணவர்கள் ஆர்வத்துடன் பள்ளிகளுக்குச் சென்றனர்.

திருச்சி சாலை புனித பிரான்சிஸ் பள்ளியில் மாணவிகள் வரவேற்க சக மாணவிகள் பூக்கள் போல உடை அணிந்து, இனிப்புகளை வழங்கி உற்சாகப்படுத்தினர்.



சில பள்ளிகளில் ஆசிரியர்கள் மேளதாளம் வாசித்தும், பாடல் பாடியும் மாணவர்களை வரவேற்றனர். இத்தகைய சிவப்பு கம்பள வரவேற்பால் மாணவர்கள் குஷியடைந்துள்ளனர்.

Newsletter

கோவை விமான நிலையத்தில் வெடிகுண்டு மிரட்டல்: வதந்தி என உறுதி

கோவை விமான நிலையத்திற்கு நேற்று இரவு வெடிகுà...