உடுமலை பாஜக சார்பில் மோடியின் மூன்றாவது பதவியேற்பு விழா கொண்டாட்டம்

உடுமலையில் பாஜக சார்பில் நரேந்திர மோடி மூன்றாவது முறையாக பிரதமராக பதவியேற்ற கொண்டாட்டத்தில் பட்டாசுகள் வெடித்து, இனிப்புகள் வழங்கப்பட்டன.


திருப்பூர்: நாடாளுமன்றத் தேர்தல் நாடு முழுவதும் 7 கட்டங்களாக நடைபெற்றது. அதைத் தொடர்ந்து கடந்த 4-ம் தேதி தேர்தல் முடிவுகள் வெளியானது. பரபரப்பான முடிவுகளுக்கு இடையே பாஜக கூட்டணி தனி பெரும்பான்மை பெற்று ஆட்சியை தக்க வைத்தது. அதைத் தொடர்ந்து நேற்று பதவியேற்பு விழா நடைபெற்றது. பிரதமராக 3-ம் முறையாக நரேந்திர மோடி பதவியேற்றார்.

அவரைத் தொடர்ந்து கேபினட் அமைச்சர்கள் இணை அமைச்சர்கள் என மொத்தம் 72 அமைச்சர்கள் பதவி ஏற்றனர். இந்த விழாவை பாஜக வினர் நாடு முழுவதும் கொண்டாடினார்கள். அந்த வகையில் உடுமலை நகர பாஜக சார்பில் மோடி பதவியேற்பு விழா கொண்டாடப்பட்டது.



விழாவிற்கு நகரத் தலைவர் கண்ணாயிரம் தலைமை வகித்தார். மாவட்ட பொதுச் செயலாளர் வடுகநாதன் முன்னிலை வகித்தார். அதைத் தொடர்ந்து மோடி 3-ம் முறையாக பதவி ஏற்பதற்கு உறுதுணையாக இருந்த கூட்டணி கட்சி மற்றும் பாஜகவினரை பாராட்டி நிர்வாகிகள் பேசினார்கள்.

மேலும் உடுமலை நகராட்சியில் 33 வார்டுகளில் சுமார் 7000 வாக்குகள் பெற்று இரண்டாம் இடம் பிடித்த நிலையில் வாக்களித்த வாக்காளர்களுக்கும் வெற்றிக்காக பாடுபட்ட பாஜக நிர்வாகிகளுக்கு நன்றிகள் பேய்க்கப்பட்டது.



இதையடுத்து பட்டாசு வெடிக்கப்பட்டு பொதுமக்களுக்கு இனிப்பு வழங்கப்பட்டது.



இந்த நிகழ்வில் பொதுச் செயலாளர்கள் சீனிவாசன், தம்பிதுரை, மாவட்ட செயலாளர் கலா, உடுமலை மகளிர் அணி ரதி, நகர துணைத் தலைவர்கள் உமா குப்புசாமி, கணேசன், ஹரி, சின்ராஜ், முருகேஷ், சிவசங்கர் உள்ளிட்ட நிர்வாகிகள் கலந்து கொண்டனர்.

Newsletter

கோவை பீளமேடு வார்டு 27-ல் நியாய விலை கடை மற்றும் தூய்மை பணி ஆய்வு

சிங்காநல்லூர் தொகுதி வார்டு 27-ல் கவுன்சிலர் அம்பிகா தனபால் இன்று நியாய விலை கடை, சாலை சுத்தம் மற்றும் குப்பை அகற்றும் ப...

சுதந்திரப் போராட்ட வீரர்களை அறிவது அனைவரின் கடமை - அமைச்சர் சம்பத்குமார்

வ.உ.சிதம்பரனாரின் 155வது பிறந்தநாளையொட்டி கோவையில் அமைச்சர் சம்பத்குமார் மரியாதை செலுத்தினார். சுதந்திரப் போராட்ட வீரர்க...

கோவை மாநகராட்சி: கோவையில் தனியார் நிலங்களில் சீமைக் கருவேலம் மரங்களை அகற்ற 10 நாள் அவகாசம்

கோவை மாநகராட்சி எல்லைக்குள் உள்ள தனியார் நிலங்களில் சீமைக் கருவேல மரங்களை 10 நாட்களுக்குள் நில உரிமையாளர்கள் வேருடன் அகற...

கோவை மாநகராட்சி: தனியார் நிலங்களில் சீமைக் கருவேலம் கப் அகற்ற 10 நாள் அவகாசம்

கோவை மாநகராட்சி எல்லைக்குள் உள்ள தனியார் நிலங்களில் சீமைக் கருவேலமரங்களை 10 நாட்களுக்குள் நில உரிமையாளர்கள் வேருடன் அகற்...

மதுக்கரை ACC சிமெண்ட் ஆலைக்கு எதிராக பொதுமக்கள் ஆர்ப்பாட்டம்

கோவை மதுக்கரையில் செயல்படும் ACC சிமெண்ட் ஆலையிலிருந்து வெளியேறும் சிமெண்ட் துகள்களால் காற்று மாசடைந்து சுவாசக் கோளாறு ஏ...

கோவையில் சாலையோர வியாபாரிகளுக்கான லோக் கல்யாண் மேலா சிறப்பு முகாம் செப்டம்பர் 7ல் தொடக்கம்

கோவை மாநகராட்சி பகுதிகளில் சாலையோர வியாபாரிகளுக்கு வங்கி கடன் வழங்கும் லோக் கல்யாண் மேலா முகாம் செப்டம்பர் 7 முதல் 25 வர...