அண்ணாமலை படத்தை வைத்து ஆடு வெட்டியவர்கள் மீது நடவடிக்கை - கோவை ஆட்சியரிடம் இந்து மக்கள் சேவா அமைப்பு மனு

கிருஷ்ணகிரி மாவட்டம் தேசிய நெடுஞ்சாலையில் ஆடு ஒன்றின் கழுத்தில் அண்ணாமலையின் படத்தை அணிவித்து ஆடு வெட்டியவர்கள் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று இந்து மக்கள் சேவா இயக்க நிர்வாகிகள் கால்களை மடக்கி் மண்டியிட்டு அண்ணாமலை் படத்துடன் கோவை ஆட்சியரிடம் மனு அளிக்க வந்தனர்.


கோவை: கடந்த ஆறாம் தேதி கிருஷ்ணகிரி மாவட்டம் தேசிய நெடுஞ்சாலை யில் ஆடு ஒன்றின் கழுத்தில் அண்ணாமலையின் படத்தை அணிவித்து ஆடு வெட்டப்பட வீடியோ வைரல் ஆனது.



இதை கண்டித்து இந்து மக்கள் சேவா இயக்கம் சார்பில் கோவை கலெக்டர் கிராந்தி குமார் பாடியிடம் கால்களை மடக்கி் மண்டியிட்டு அண்ணாமலை் படத்துடன் மனு அளிக்க வந்தனர்.



இது குறித்து இந்து மக்கள் சேவா இயக்கம் தலைவர் மணிகண்டன் பேசுகையில், ஆடு வெட்டுகிற காட்சிகள் வெளி வந்த பின்பும், சம்பந்தப்பட்டவர்கள் மீது நடவடிக்கைகள் இல்லை. ஆனால் எம்பி கங்கனா மீது நடத்தப்பட தாக்குதலுக்கு கோவையிலிருந்து திமுக ஆதரவு பெற்ற பெரியார் திரவிட கட்சிகள் பாராட்டி மோதிரம் அனுப்பி உள்ளனர். இப்படி சூழலில் தொடந்து வன்முறை தூண்டுபவர்கள் மீது நடவடிக்கைகள் எடுக்க வேண்டும் என்று மனு அளித்துள்ளதாக தெரிவித்தார்.

Newsletter

கோவை விமான நிலையத்தில் வெடிகுண்டு மிரட்டல்: வதந்தி என உறுதி

கோவை விமான நிலையத்திற்கு நேற்று இரவு வெடிகுà...