கோவையில் (ஜூன்.12) இன்று இடியுடன் கூடிய லேசான மழை பெய்ய வாய்ப்பு - சென்னை வானிலை ஆய்வு மையம் தகவல்

கோவையில் (ஜூன்.12) இன்று ஒரு சில இடங்களில் இடியுடன் கூடிய லேசானது முதல் மிதமான மழைக்கு வாய்ப்புள்ளது. வரும் 13ம் தேதி முதல் 17ம் தேதி வரை குறைந்தபட்சம் 27 டிகிரி செல்சியஸ் முதல், அதிகபட்சம் 37 டிகிரி செல்சியஸ் வரை வெப்பம் பதிவாக வாய்ப்புள்ளது என்று சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.


கோவை: கோவை, சென்னை, மதுரை, புதுவையில் வரும் 17ம் தேதி வரை வானிலை முன்னறிவிப்பை சென்னை வானிலை ஆய்வு மையம் அண்மையில் வெளியிட்டுள்ளது. அதன்படி கோவையில் (ஜூன்.12) இன்று ஒரு சில இடங்களில் இடியுடன் கூடிய லேசானது முதல் மிதமான மழைக்கு வாய்ப்புள்ளது. வரும் 13ம் தேதி முதல் 17ம் தேதி வரை குறைந்தபட்சம் 27 டிகிரி செல்சியஸ் முதல், அதிகபட்சம் 37 டிகிரி செல்சியஸ் வரை வெப்பம் பதிவாக வாய்ப்புள்ளது.

சென்னையில் இன்று ஒரு சில இடங்களில் லேசானது முதல் மிதமான மழைக்கு வாய்ப்பு உள்ளது. 13ம் தேதி முதல் 17ம் தேதி வரை குறைந்தபட்சம் 26 டிகிரி செல்சியஸ் முதல் அதிகபட்சமாக 38 டிகிரி செல்சியஸ் வரை வெப்பம் பதிவாக வாய்ப்பு உள்ளது. மதுரையில் இன்று முதல் வரும் 17ம் தேதி வரை குறைந்தபட்சம் 26 டிகிரி செல்சியஸ் முதல் அதிகபட்சமாக 38 டிகிரி செல்சியஸ் வரை வெப்பம் பதிவாக வாய்ப்பு உள்ளது.

புதுச்சேரியில் இன்று ஒரு சில இடங்களில் மழைக்கு வாய்ப்பு உள்ளதாவும், 13 முதல் 17ம் தேதி வரை குறைந்தபட்சம் 27 டிகிரி செல்சியஸ் முதல் அதிகபட்சமாக 37 டிகிரி செல்சியஸ் வரை வெப்பம் பதிவாக வாய்ப்பு உள்ளதாகவும் சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.

Newsletter

கோவை விமான நிலையத்தில் வெடிகுண்டு மிரட்டல்: வதந்தி என உறுதி

கோவை விமான நிலையத்திற்கு நேற்று இரவு வெடிகுà...