தாராபுரத்தில் இருசக்கர வாகனத்தை திருடிய கொள்ளையனை சிசிடிவி காட்சிகளை வைத்து கைது செய்த காவல்துறை

தாராபுரம் பகுதியிலுள்ள அண்ணா நகர் பகுதியில் கடந்த இரண்டாம் தேதி வீட்டின் முன்பு நிறுத்தி வைக்கப்பட்டிருந்த இரு சக்கர வாகனத்தை திருடிச்சென்ற தேனி மாவட்டத்தை சேர்ந்த பாண்டிஸ்வரன் என்பவரை சிசிடிவி காட்சிகள் மூலம் போலீசார் கண்டுபிடித்து கைது செய்தனர்.


திருப்பூர்: திருப்பூர் மாவட்டம் தாராபுரம் பகுதியிலுள்ள அண்ணா நகர் பகுதியில் கடந்த இரண்டாம் தேதி வீட்டின் முன்பு நிறுத்தி வைக்கப்பட்டிருந்த ஹீரோ ஹோண்டா ஸ்ப்லெண்டர் வாகனம் திருடப்பட்டதாக வீட்டின் உரிமையாளர் தாராபுரம் காவல் நிலையத்தில் புகார் அளித்தார்.



இந்த புகாரின் பேரில் தாராபுரம் குற்றப்பிரிவு போலீசார் வழக்கு பதிவு செய்து, தாராபுரம் காவல் துணை கண்காணிப்பாளர் கலையரசன் மேற்பார்வையில் தாராபுரம் காவல் ஆய்வாளர் ரவி தலைமையில், உதவி ஆய்வாளர்கள் முத்துக்குமார், சிவராஜ் மற்றும் தலைமை காவலர்கள் ராஜன், கலைச்செல்வன் மற்றும் பாலசுப்ரமணியம் ஆகியோர் கொண்ட தனிப்படை அமைக்கப்பட்டு காணாமல் போன இருசக்கர வாகனத்தை தேடி வந்தனர்.

இதேபோன்று உடுமலைப்பேட்டை காவல் நிலையத்திலும் இரு சக்கர வாகனம் காணாமல் போன வழக்கு தொடர்பாக வழக்கு பதிவு செய்யப்பட்டது. உடுமலைப்பேட்டைக்கு சென்ற தனிப்படை காவலர்கள் அங்கு உள்ள சிசிடிவி கேமராக்களை ஆய்வு செய்து குற்றவாளியை கண்டுபிடித்தனர்.

குற்றவாளி தேனி மாவட்டம் கடமலைக்குண்டுவைச் சேர்ந்த சின்னமுத்து என்பவரது மகன் பாண்டிஸ்வரன் வயது 22 என்பவரை சந்தேகத்தின் அடிப்படையில் கைது செய்து தாராபுரம் காவல் நிலையத்திற்கு அழைத்து வந்து விசாரணை மேற்கொண்டனர். இவர் தாராபுரத்தில் கடந்த இரண்டாம் தேதி இருசக்கர வாகனம் திருடியதை ஒப்புக்கொண்டார். அதைத் தொடர்ந்து அந்த இருசக்கர வாகனம் பறிமுதல் செய்யப்பட்டு குற்றவாளியை திருப்பூர் மாவட்ட சிறையில் அடைத்தனர்.

Newsletter

மேட்டுப்பாளையம் துணை மின் நிலையத்தில் நாளை (29.08.2026) மின்தடை

மேட்டுப்பாளையம் துணை மின் நிலையத்தில் மாதாந்திர பராமரிப்பு பணிகள் நாளை (29.08.2026) காலை 9 மணி முதல் மாலை 5 மணி வரை நடைப...

பசூர் துணை மின் நிலையத்தில் நாளை (29.08.2026) மின்தடை

பசூர் துணை மின் நிலையத்தில் நாளை ஆகஸ்ட் 29 அன்று காலை 9 மணி முதல் மாலை 5 மணி வரை மாதாந்திர மின் பராமரிப்பு பணி நடைபெறும்...

அன்னூர் துணை மின் நிலையத்தில் நாளை (29.08.2026) மின்தடை

அன்னூர் துணை மின் நிலையத்தில் நாளை (29.08.2026) காலை 9 மணி முதல் மாலை 5 மணி வரை மாதாந்திர பராமரிப்புப் பணிகள் நடைபெறும்....

கோவை டாடாபாத் துணை மின் நிலையத்தில் நாளை (29.08.2026) மின்தடை

கோவை டாடாபாத் துணை மின் நிலையத்தில் ஆகஸ்ட் 29 அன்று காலை 9 மணி முதல் மாலை 5 மணி வரை மாதாந்திர மின் பராமரிப்பு பணிகள் நடை...

சூலூர் துணை மின் நிலையத்தில் நாளை (29.08.2026) மின்தடை

சூலூர் துணை மின் நிலையத்தில் மாதாந்திர பராமரிப்பு பணிகள் நாளை (29.08.2026) காலை 9 முதல் மாலை 5 வரை நடைபெறும். டி.எம். நக...

Mayor Inaugurates Special Camp for Persons with Disabilities in Coimbatore

A special camp for persons with disabilities was inaugurated and inspected by Mayor Ranganayaki Ramachandran at Kaumara...