இந்து கட்சி பிரமுகர் சசிகுமார் கொலை வழக்கில் குற்றவாளிகள் குறித்து தகவல் தெரிவிப்பவர்களுக்கு ரூ.2 லட்சம் வெகுமதி

கோவை மாவட்டத்தில் கடந்த 2016ம் ஆண்டு செப்டம்பர் 22ம் தேதியன்று இந்து கட்சிப் பிரமுகர் சசிகுமார் மர்மநபர்களால் வெட்டி படுகொலை செய்யப்பட்டார். இதுகுறித்து விசாரணை மேற்கொண்ட சிஐடி பிரிவு காவலர்கள் சசிகுமார் கொலை வழக்கில் தொடர்புடைய இருவர் புகைப்படங்களை கண்டறிந்தனர்.

அவர்கள், கோவை சாய்பாபா காலனி, கருணாநிதி நகர் முதல் வீதியில் வசிக்கும் ஜே.பார்ஹதுல்லா என்பவரது மகன் சதாம் மற்றும் சாய்பாபா காலனி அங்கண்ணன் தெரு 5-வது வீதியில் வசிக்கும் அத்துல் ராஜா என்பவரது மகன் முபாரக் என்பது தெரியவந்தது. 

இதனைத்தொடர்ந்து, தலைமறைவாக உள்ள இருவரிடமும் விசாரணை மேற்கொள்ள அழைத்த நிலையில், அவர்கள் முறையாக ஒத்துழைக்கவில்லை என குற்றஞ்சாட்டப்பட்டது. இதைத்தொடர்ந்து, சிபிசிஐடி காவலர்கள் விசாரணைக்காக அழைத்த நிலையிலும் மேற்குறிப்பிட்ட இருவரும் ஒத்துழைக்காமல் இருந்து வந்துள்ளனர். 

இந்நிலையில், தற்போது மேற்குறிப்பிட்ட சதாம் மற்றும் முபாரக் குறித்து பொதுமக்கள் தகவல் அளிக்க அறிவிப்பு வெளியிடப்பட்டுள்ளது. அவ்வாறு தகவல் அளிக்கும் நபர்களுக்கு தலா 2 லட்சம் ரூபாய் பரிசுத் தொகையும் வழங்கவுள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது.

இவர்கள் குறித்து தகவல் அளிப்போர், கோவை எஸ்ஐடி, சிபிசிஐடி காவல்துறை துணை கண்காணிப்பாளர் எஸ்.அனந்த குமார்-க்கு 9498104409 என்ற தொலைபேசி எண்ணிலும், எஸ்ஐடி, சிபிசிஐடி காவல்துறை ஆய்வாலர் ஆனந்த் ஆரோக்கிய ராஜ்-க்கு 9498174230 என்ற தொலை பேசி எண்ணிலும், கோவை சிபிசிஐடி சிறப்பு ஆய்வுப் பிரிவுக்கு 0422 2241752 என்ற எண்ணிலும் மற்றும் சென்னை சிபிசிஐடி கட்டுப்பாட்டு அறைக்கு 044 28512510 என்ற எண்ணிலும் பொதுமக்கள் தொடர்புகொண்டு தகவல் தெரிவிக்கலாம். மேலும், [email protected] என்ற இணையதள முகவறியிலும் தகவல் தெரிவிக்கலாம். 

Newsletter

கோவையில் சாலையோர வியாபாரிகளுக்கான லோக் கல்யாண் மேலா சிறப்பு முகாம் செப்டம்பர் 7ல் தொடக்கம்

கோவை மாநகராட்சி பகுதிகளில் சாலையோர வியாபாரிகளுக்கு வங்கி கடன் வழங்கும் லோக் கல்யாண் மேலா முகாம் செப்டம்பர் 7 முதல் 25 வர...

கவுண்டம்பாளையத்தில் குப்பையில் கிடந்த 3 கிராம் தங்க கம்மலை உரிமையாளரிடம் ஒப்படைத்த தூய்மைப் பணியாளர்

கோவை மாநகராட்சி வடக்கு மண்டலம் கவுண்டம்பாளையம் ரங்கா லே அவுட் பகுதியில் குப்பை சேகரிக்கும் பணியில் ஈடுபட்டிருந்த தூய்மைப...

பொள்ளாச்சி அருகே திருடிய நகைகளை விற்று காதலனுக்கு பைக் பரிசளித்த கல்லூரி மாணவி கைது

பொள்ளாச்சி அருகே குடும்ப நண்பரின் வீட்டில் 9 பவுன் தங்க நகைகளை திருடிய வழக்கில் 19 வயது கல்லூரி மாணவியை போலீசார் கைது செ...

கோவையில் விஸ்வ ஹிந்து பரிஷத் அமைப்பின் கிருஷ்ண ஜெயந்தி விழா; ராதை, கிருஷ்ணர் வேடமிட்டு குழந்தைகள் ஊர்வலம்

கோவை விஸ்வ ஹிந்து பரிஷத் சார்பில் 14-ஆம் ஆண்டு கிருஷ்ண ஜெயந்தி விழா விமரிசையாக நடைபெற்றது. சாஸ்திரி ரோட்டில் இருந்து சிவ...

Palakkad–Tiruchchirappalli Express to Be Short-Terminated at Pugalur on Four Days

The Palakkad Town–Tiruchchirappalli Express will be short-terminated at Pugalur on September 5, 8, 10 and 12 due to slee...

“விஜய் பிரதமர் வேட்பாளரா? – என்னை சிக்கலில் விட்டுவிடாதீர்கள்”: கோவையில் செங்கோட்டையன் பதில்

கோவை விமான நிலையத்தில் இன்று செய்தியாளர்களை சந்தித்த அமைச்சர் செங்கோட்டையன், தமிழகத்தில் பல்வேறு துறைகளுக்கான அறிவிப்புக...