திருமண வீடியோவை வழங்காத ஸ்டுடியோ உரிமையாளர் இழப்பீடு வழங்க வேண்டும் - கோவை நுகர்வோர் நீதிமன்றம் உத்தரவு

திருமண வீடியோவை வழங்காமல் இழுத்தடித்த நாட் போட்டோகிராபி நிறுவனம் இந்துமதி, கே.மயில்சாமி ஆகியோருக்கு ஸ்டூடியோ உரிமையாளர் பெற்ற பணம் ரூ.1 லட்சத்து 35 ஆயிரத்துடன் சேர்ந்து, ரூ.2 லட்சத்து 50 ஆயிரத்தை மன உளைச்சலுக்கு இழப்பீடாக வழங்க வேண்டும், கோர்ட்டு செலவிற்காக ரூ.5,000 வழங்க வேண்டும் என நீதிபதி உத்தரவிட்டார்.


கோவை: கோவை, சரவணம்பட்டியை சேர்ந்த இந்துமதி, கே.மயில்சாமி ஆகியோர் கோவை நுகர்வோர் நீதிமன்றத்தில் ஒரு மனு தாக்கல் செய்தனர். அதில் எங்கள் குடும்ப திருமண நிகழ்வை வீடியோவில் பதிவு செய்யவும், போட்டோ எடுக்கவும் கோவை காந்திபுரத்தில் உள்ள நாட் போட்டோகிராபி நிறுவனத்திடம் ஒப்படைத்து இருந்தோம். இதற்காக முன் பணமாக ரூபாய் 1 லட்சத்து 35 ஆயிரம் பெற்றுக் கொண்டனர்.

திருமணத்தை பதிவு செய்த பின்னர் வீடியோ மற்றும் போட்டோவை கொடுக்கவில்லை. பின்னர் அந்த நிறுவனத்தை மூடிவிட்டு வேறு இடத்துக்கு இடமாற்றம் செய்து விட்டனர். அந்த முகவரியை அறிந்து அங்கு சென்று கேட்டோம். ஆனால் பணத்தை திரும்பி தரவில்லை. வீடியோ கிடைக்காததால் குடும்ப உறுப்பினர்களிடம் காண்பிக்க முடியவில்லை.

இதனால் மன உளைச்சல் ஏற்பட்டது. இதற்கு சம்பந்தப்பட்ட ஸ்டுடியோ உரிமையாளர் இழப்பீடு வழங்க உத்தரவிட வேண்டும் என்று கூறப்பட்டு இருந்தது. மனுவை விசாரித்த நீதிபதி தங்கவேலு ஸ்டூடியோ உரிமையாளர் பெற்ற பணம் ரூ.1 லட்சத்து 35 ஆயிரத்தை வழங்குவதுடன் ரூ.2 லட்சத்து 50 ஆயிரத்தை மன உளைச்சலுக்கு இழப்பீடாக வழங்க வேண்டும், கோர்ட்டு செலவிற்காக ரூ.5,000 வழங்க வேண்டும் என உத்தரவிட்டார்.

Newsletter

கோவை விமான நிலையத்தில் வெடிகுண்டு மிரட்டல்: வதந்தி என உறுதி

கோவை விமான நிலையத்திற்கு நேற்று இரவு வெடிகுà...