கோயம்புத்தூர் மாவட்டத்தில் சொத்துக்களுக்கான சந்தை மதிப்பு வழிகாட்டி புதுப்பிப்பு

கோவை மாவட்ட ஆட்சியர் கிராந்தி குமார் பாடி, சொத்துக்களுக்கான சந்தை மதிப்பு வழிகாட்டி பதிவேடு புதுப்பிக்கப்பட்டு, அதன் பதிவு வட்டாட்சியர் மற்றும் சார்பதிவாளர் அலுவலகங்களில் வைக்கப்பட்டுள்ளது.



கோவை: கோவை மாவட்ட ஆட்சியர் கிராந்தி குமார் பாடி அண்மையில் வெளியிட்டுள்ள அறிக்கையில், கோவை: சந்தை மதிப்பு வழிகாட்டி மதிப்பினை சீரமைத்தல் தொடர்பாக இந்தியமுத்திரைச் சட்டப் பிரிவு 47AA-ன் கீழான தமிழ்நாடு முத்திரை (சொத்துக்களுக்கான சந்தை மதிப்பு வழிகாட்டி தயாரிக்க மதிப்பீடு செய்தல், வெளியிடுதல் மற்றும் திருத்தியமைத்தலுக்காக மதிப்பீட்டு குழு ஏற்படுத்துதல்) விதிகள் 2010, விதிகளில் விதி 4(2)-ன்படி மைய மதிப்பீட்டு குழு 26.04.2024ல் நிர்ணயம் செய்த நெறிமுறை கோட்பாட்டிற்கு இணங்க கோயம்புத்தூர் மாவட்டத்தில் உள்ள வருவாய் கிராமங்கள் வாரியாக வரைவு வழிகாட்டி பதிவேடு தயாரிக்கப்பட்டு, பொதுமக்கள் பார்வையிடும் வகையில் வட்டாட்சியர், சார்பதிவாளர் அலுவலகங்கள் உட்பட முக்கிய அரசு அலுவலகங்களில் வைக்கப்பட்டுள்ளது. 

மேலும் இதன் விவரங்கள் www.tnreginet.gov.in என்ற இணையதள முகவரியில் அனைவரும் தெரிந்து கொள்ளும் வகையில் வெளியிடப்பட்டுள்ளது.

இதன் மீது ஏதேனும் ஆட்சேபனைகள் மற்றும் கருத்துரைகள் இருப்பின், அதனை 15 நாட்களுக்குள் மாவட்ட ஆட்சியர் தலைமையிலான மதிப்பீட்டு துணைக்குழுவிடம், மாவட்ட ஆட்சிதலைவர் தலைவர், மதிப்பீட்டு துணைக்குழு, மாவட்ட ஆட்சியர் அலுவலகம், கோயம்புத்தூர் மாவட்டம், என்ற முகவரியில் நேரிலோ அல்லது தபால் மூலமாகவோ அளித்திடலாம் என மாவட்ட ஆட்சித்தலைவர் கிராந்தி குமார் பாடி தெரிவித்துள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.

Newsletter

கோவை விமான நிலையத்தில் வெடிகுண்டு மிரட்டல்: வதந்தி என உறுதி

கோவை விமான நிலையத்திற்கு நேற்று இரவு வெடிகுà...