கோவையில் பெருகிவரும் சைபர் கிரைம் வழக்குகள் - சைபர் கிரைம் காவல்துறை அறிவிப்பு

கோவை நகரில் கடந்த 5 மாதங்களில் 2,446 சைபர் கிரைம் வழக்குகள் பதிவாகியுள்ளன, மேலும் பொதுமக்கள் 53.07 கோடி ரூபாய் இழந்துள்ளனர்.


கோவை: கோவை சைபர் கிரைம் காவல்துறையினர் இன்று ஜூன்.12 வெளியிட்டுள்ள செய்தி குறிப்பில், உலகம் முழுவதும் பலதுறைகளின் வளர்ச்சி நாளுக்கு நாள் அதிகரித்து வருகிறது. அதேபோல், வளர்ந்து வரும் நவீன தொழில்நுட்பங்களுக்கு ஏற்ப மோசடிகளும் வளர்ந்து வருகின்றன.

வங்கி வாடிக்கையாளர்களிடம் ஏடிஎம் கார்டின் 13 இலக்க எண்ணை பெற்று பண மோசடி செய்தது தொடங்கி தற்போது காவல்துறை, சிபிஐ அதிகாரிகள் போல பேசி ஆன்லைன் மோசடி என மோசடிகள் தினம் தினம் வளர்ந்து வருகின்றன. இதன் தொடர்ச்சியாக, ஆன்லைன் விற்பனை செயலி மூலம் கார், பைக் குறைந்த விலைக்கு விற்பனை செய்வதாக கூறி பதிவு செய்து, அதன் மூலம் தொடர்பு கொள்பவர்களிடம், ஏதேதோ காரணங்களை கூறி முன் பணம் பெற்றுக்கொண்டு அவர்களை ஏமாற்றுவது, ஆன்லைன் வர்த்தகம் மூலம் அதிக லாபம் பெறலாம் என்று கூறி பணமோசடியில் ஈடுபடுவது, ஆன்லைனில் பகுதி நேர வேலை என்று கூறி மோசடியில் சிக்க வைப்பது என பல வகைகளில் தற்போது பணமோசடிகள் நடைபெற்று வருகிறது.

இந்நிலையில், கோவை நகரில் மட்டும் கடந்த 5 மாதங்களில் 2,446 சைபர் கிரைம் தொடர்பான மோசடிகள் பதிவாகி உள்ளதாக கோவை மாநகர சைபர் கிரைம் காவல்துறை தெரிவித்துள்ளது. மேலும் சைபர் கிரைம் மோசடிகள் மூலம் பொதுமக்கள் ரூ.53.07 கோடி வரை பணம் இழந்துள்ளதாக கூறப்படுகிறது. அதில், ரூ.4.31 கோடியை சைபர் கிரைம் காவல்துறையினர் மீட்டுள்ளனர்.

மேலும் கோவை நகருக்கு உட்பட பகுதிகளில் இருந்து தினமும் சுமார் 10 – 15 வரையிலான ஆன்லைன் மோசடி புகார்கள் பதிவாகின்றன. இவற்றில் பெரும்பாலான புகார்கள் ஆன்லைன் பகுதி நேர வேலை, ஆன்லைன் வர்த்தகத்தில் குறைந்த முதலீட்டில் நிறைந்த லாபம் எனக்கூறி மோசடி செய்ததாக இருக்கிறது.

இந்த மோசடிகளில் ஈடுபடுபவர்கள் வாட்ஸ் ஆப் மற்றும் டெலிகிராம் போன்ற செயலிகளை தேர்ந்தெடுக்கிறார்கள். எனவே, அடையாளம் தெரியாத நபர்களிடம் இருந்து ஏதேனும் குறுந்தகவல் வந்தால் அதற்கு பதிலளிக்க வேண்டாம்.

இதுபோன்ற மோசடிகளில் பாதிக்கப்படுபவர்கள் பெரும்பாலானோர் பட்டதாரிகள், பொறியியலாளர்கள், ஐடி ஊழியர்களாகவே உள்ளனர். சைபர் கிரைம் மோசடி தொடர்பாக விழிப்புணர்வு செய்யப்பட்டு வருகிறது.

சமூக வலைதளங்களில் பணம் தொடர்பாக வரும் வேண்டுகோள்களை மக்கள் முற்றிலுமாக நிராகரிக்க வேண்டும். நாம் வாழ்நாளில் கஷ்டப்பட்டு சம்பாதிக்கும் பணத்தை கவனமுடன் செயல்பட்டால் இழக்காமல் இருக்கலாம்.

உங்களுக்கு யாரோ பார்சலில் போதைப்பொருள் அனுப்பி உள்ளனர் என சிபிஐ அதிகாரிபோல பேசுவார்கள், பின்னணி செட்டப்பில் வாக்கி டாக்கியின் ஒலி கேட்கும். இதனால் எதிர் முனையில் பேசுவர்களுக்கு பயத்தை காட்டி, கைது நடவடிக்கை மேற்கொள்ளாமல் இருக்க பணம் அனுப்ப வேண்டும் எனக்கூறி சமீபகாலமாக மோசடியில் ஈடுபட்டு வருகின்றனர்.

இது போன்ற பல்வேறு மோசடிகளை அடுக்கி கொண்டே போகலாம். எனவே பொதுமக்கள் எச்சரிக்கையாக இருக்க வேண்டும். கடந்த 5 மாதத்தில் மோசடி தொடர்பாக 18 பேர் கைது செய்யப்பட்டுள்ளனர். 2 பேர் மீது குண்டர் தடுப்பு சட்டத்தில் வழக்குப்பதிவு செய்யப்பட்டுள்ளது” எனத் தெரிவித்தனர்.

Newsletter

உலகத்திறன் போட்டிகள் 2027-க்கான பதிவு தொடக்கம் - கோவை ஆட்சியர் அறிவிப்பு

ஷாங்காய், சீனா 2026ல் நடைபெறும் உலகத்திறன் போட்டிகளுக்கான இந்தியத் திறன் போட்டிகள் 2027-க்கு பதிவுகள் துவங்கின. 16 முதல்...

கோவையில் டெங்கு தடுப்பு: பள்ளி, கல்லூரிகளுக்கு சரிபார்ப்பு பட்டியல் வழங்கப்படும்

கோவை மாநகராட்சி 100 வார்டுகளில் டெங்கு தடுப்பு நடவடிக்கைகளை தீவிரப்படுத்தியுள்ளது. 28.08.2026 முதல் பள்ளிகள், கல்லூரிகள்...

கோவை மாநகராட்சி மத்திய மண்டலத்தில் டெங்கு கொசு ஒழிப்பு பணிகள் தீவிரம்

கோயம்புத்தூர் மாநகராட்சி மத்திய மண்டல பகுதிகளில் டெங்கு கொசு ஒழிப்பு பணிகள் தீவிரமாக மேற்கொள்ளப்பட்டு வருகின்றன. வார்டு...

கோவை பீளமேடு பகுதியில் டெங்கு ஒழிப்பு உள்ளிட்ட பல்வேறு பணிகளை ஆய்வு செய்த கவுன்சிலர்

சிங்காநல்லூர் சட்டமன்ற தொகுதி வார்டு 27 கவுன்சிலர் அம்பிகா தனபால் பீளமேடு பகுதிகளில் டெங்கு கொசு ஒழிப்பு, சாலை அமைப்பு,...

திருப்பூரில் அமராவதி, திருமூர்த்தி அணைகளில் நீர்மட்டம் உயர்வு

திருப்பூர் மாவட்டத்தில் அமராவதி அணையின் நீர்மட்டம் ஆகஸ்ட் 27ஆம் தேதி 59.22 அடியாக உயர்ந்துள்ளது. நீர் பிடிப்பு பகுதிகளில...

ஆழியாறு, பரம்பிக்குளம், சோலையாறு அணைகளில் நீர்மட்டம் உயர்வு

ஆனைமலை, பொள்ளாச்சி, வால்பாறை பகுதிகளில் உள்ள அணைகளில் தென்மேற்கு பருவமழை காரணமாக நீர்மட்டம் உயர்ந்துள்ளது. ஆழியாறு அணையி...