நீட் தேர்வில் ஏற்படும் குளறுபடிகளை கண்டித்து கோவையில் ஆர்ப்பாட்டம்

கோவையில் இன்று பெரியாரிய, மார்க்சிய, திராவிட அமைப்புகள் சார்பில் நீட் தேர்வுக்கு எதிரான கண்டன ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. இதில் நாடு முழுவதும் நடைபெறும் நீட் தேர்வில் பாரபட்சம் காட்டப்படுவதாகவும், தமிழக மாணவர்கள் வஞ்சிக்கப்படுவதாகவும் குற்றச்சாட்டு முன் வைக்கப்பட்டது.


கோவை: நீட் தேர்வில் அதிகப்படியான குளறுபடிகள் ஏற்படுவதாக தெரிவித்து கோவையில் மத்திய அரசை கண்டித்து பல்வேறு இயக்கங்கள் சார்பில் கண்டன ஆர்ப்பாட்டம் நடத்தப்பட்டது.



நீட் தேர்வு அமலுக்கு வந்தது முதலே தமிழகத்தில் தொடர்ச்சியான போராட்டங்கள் நடத்தப்பட்டு வருகிறது.

இந்நிலையில் தற்போது நீட்டுக்கு எதிரான போராட்டம் நாடு தழுவிய அளவில் நடைபெற்று கொண்டிருக்கிறது.



கோவையில் இன்று பெரியாரிய, மார்க்சிய, திராவிட அமைப்புகள் சார்பில் நீட் தேர்வுக்கு எதிரான கண்டன ஆர்ப்பாட்டம் நடைபெற்றது.



இதில் நாடு முழுவதும் நடைபெறும் நீட் தேர்வில் பாரபட்சம் காட்டப்படுவதாகவும், தமிழக மாணவர்கள் வஞ்சிக்கப்படுவதாகவும் குற்றச்சாட்டு முன்வைக்கப்பட்டது.



மத்திய அரசு நீட் தேர்வை ரத்து செய்ய வேண்டும் இல்லை எனில் மாநில அரசுகளுக்கு உரிமையை வழங்க வேண்டும் எனவும் நீட் தேர்வு வினாத்தாள் விற்பனை செய்யப்படுவதாகவும் போராட்டத்தில் ஈடுபட்டுள்ளவர்கள் குற்றம் சாட்டினர்.

Newsletter

கோவை விமான நிலையத்தில் வெடிகுண்டு மிரட்டல்: வதந்தி என உறுதி

கோவை விமான நிலையத்திற்கு நேற்று இரவு வெடிகுà...