கோவை வட்ட வழங்கல் அலுவலகங்களில் வரும் 15ஆம் தேதி பொது விநியோகத் திட்ட குறைதீா் சிறப்பு முகாம் - ஆட்சியர் அறிவிப்பு

முகாமில், குடும்ப அட்டையில் பெயா் சோ்த்தல், பெயா் நீக்கல், முகவரி மாற்றம், நகல் குடும்ப அட்டை, கைப்பேசி எண், குடும்பத் தலைவா் புகைப்படம் மாற்றம் தொடா்பான கோரிக்கைகளை மனுக்களாக வழங்கி பொதுமக்கள் பயன்பெறலாம் என்று மாவட்ட ஆட்சியா் கிராந்திகுமார் பாடி தெரிவித்துள்ளார்.


கோவை: கோவை மாவட்ட ஆட்சியர் அண்மையில் வெளியிட்டுள்ள அறிக்கையில், பொது விநியோகத் திட்டத்தின் சேவைகளை அனைத்துத் தரப்பு மக்களும் பயன்பெறும் வகையில் ஒவ்வொரு மாதமும் இரண்டாவது சனிக்கிழமையன்று மாவட்டத்தில் அனைத்து வட்டாட்சியா் அலுவலகங்களில் செயல்படும் வட்ட வழங்கல் அலுவலகங்களில் சிறப்பு குறைதீா் முகாம்கள் நடைபெற்று வருகிறது.

அதன்படி, இந்த மாதத்துக்கான பொது விநியோகத் திட்ட குறைதீா் சிறப்பு முகாம் அனைத்து வட்டாட்சியா் அலுவலகங்களில் இயங்கி வரும் வட்ட வழங்கல் அலுவலகங்களில் ஜூன் 15-ஆம் தேதி காலை 10 மணி முதல் பகல் 1 மணி வரை நடைபெறுகிறது.

இந்த முகாமில், குடும்ப அட்டையில் பெயா் சோ்த்தல், பெயா் நீக்கல், முகவரி மாற்றம், நகல் குடும்ப அட்டை, கைப்பேசி எண், குடும்பத் தலைவா் புகைப்படம் மாற்றம் தொடா்பான கோரிக்கைகளை மனுக்களாக வழங்கி பொதுமக்கள் பயன்பெறலாம் என்று மாவட்ட ஆட்சியா் கிராந்திகுமார் பாடி தெரிவித்துள்ளார்.

Newsletter

கோவை மாநகராட்சி மத்திய மண்டல அலுவலகத்தில் DVAC சோதனை; கணக்கில் வராத ₹12,200 பறிமுதல்

தமிழகம் முழுவதும் நடைபெற்ற ஒருங்கிணைந்த லஞ்ச ஒழிப்புத்துறை சோதனையின் ஒரு பகுதியாக, கோவை மாநகராட்சி மத்திய மண்டல அலுவலகத்...

கோவை மாநகராட்சியில் வரன்முறைப்படுத்தப்படாத மனைகளுக்கு ஜூலை 15 முதல் 18 வரை சிறப்பு முகாம்

கோயம்புத்தூர் மாநகராட்சி 100 வார்டுகளில் உள்ள வரன்முறைப்படுத்தப்படாத தனிப்பட்ட மனைகள் மற்றும் லேஅவுட்களை ஒழுங்குபடுத்த ஜ...

கோவை 27வது வார்டில் புதிய ஏ.இ. அலுவலகம், சாக்கடை சீரமைப்பு மற்றும் தூய்மைப் பணிகள் ஆய்வு

கோவை மாநகராட்சி வார்டு 27 கவுன்சிலர் அம்பிகா தனபால் ஜூலை 3-ஆம் தேதி பீளமேடு பாரதி காலனியில் புதிய வார்டு ஏ.இ. அலுவலக கட்...

கோவையில் சமூக நீதி விடுதி மாணவர்களுக்கான WhatsApp புகார் எண் அறிமுகம்

கோவை மாவட்ட ஆட்சியர் பவன்குமார், சமூக நீதி விடுதிகளில் தங்கும் மாணவர்கள் தங்கள் புகார்களையும் பாதுகாப்பு குறைபாடுகளையும்...

சிறுவாணி சாலையில் குப்பை கொட்டிய நிறுவனத்திற்கு ரூ.10,000 அபராதம்

கோவை மாநகராட்சி மேற்கு மண்டலம் வார்டு 39-ல் உள்ள சிறுவாணி சாலையில் குப்பை கொட்டிய தனியார் நிறுவனத்திற்கு ரூ.10,000 அபராத...

கோவையில் புதிய கட்டிடத்தில் டெங்கு கொசுப்புழு: உரிமையாளருக்கு ₹50,000 அபராதம்

கோவை மாநகராட்சி கிழக்கு மண்டலம் வார்டு எண் 8, காளப்பட்டி பிரதான சாலையில் கட்டப்படும் புதிய கட்டிடத்தில் சுகாதாரத் துறையி...