கோவையில் இருந்து விமானம் மூலம் காசி, அயோத்தி, கயா செல்ல ஆன்மிக சுற்றுலா - இந்தியன் ரயில்வே உணவு மற்றும் சுற்றுலா கழகம் அறிவிப்பு

ஜூலை 18ம் தேதி கோவையில் இருந்து காசி விஸ்வநாதர் விமான சுற்றுலா துவங்குகிறது. கோவையில் இருந்து அன்னபூரணி ஆலயம், காசி விசாலாட்சி ஆலயம், காலபைரவர் கோவில், சாரநாத் போன்ற இடங்களை காண ஆன்மிக சுற்றுலா இயக்கப்படுகிறது என்று இந்தியன் ரயில்வே உணவு மற்றும் சுற்றுலா கழகம் தெரிவித்துள்ளது.


கோவை: இந்தியன் ரயில்வே உணவு மற்றும் சுற்றுலா கழகம் இன்று ஜூன்.13 வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில், இந்தியன் ரயில்வே உணவு மற்றும் சுற்றுலா கழகம் பல்வேறு சுற்றுலாக்களை ஏற்பாடு செய்து வருகிறது. மேலும் பாரத் கவுரவ் சுற்றுலா, ரயில் சுற்றுலா, பள்ளி, கல்லுாரிகளுக்கான கல்வி சுற்றுலா போன்றவற்றை இயக்கி வருகிறது.

இந்த ரயில் மூலமாகவும் மற்றும் விமானம் மூலமாகவும் பல்வேறு சுற்றுலா திட்டங்கள் செயல்படுத்தப்படுகின்றன. இதில், காசி, அயோத்தி, அலகாபாத், கயா, புத்தகயா விமான சுற்றுலா, பயணிகளிடம் நல்ல வரவேற்பை பெற்றிருக்கிறது. இந்த நிலையில் வரும் ஜூலை 18ல் கோவையில் இருந்து காசி விஸ்வநாதர் விமான சுற்றுலா துவங்குகிறது.

கோவையில் இருந்து அன்னபூரணி ஆலயம், காசி விசாலாட்சி ஆலயம், காலபைரவர் கோவில், சாரநாத், கங்கா ஆரத்தி, அலகாபாத் திரி வேணி சங்கமம், பாதாள அனுமன் ஆலயம், அலகாபாத் கோட்டை, அயோத்தி ராமர் கோவில், புத்தகயாவில் உள்ள புத்தர் சிலை மற்றும் மகோபோதி ஆலயம், கயாவில் உள்ள விஷ்ணு பாத ஆலயம் போன்ற இடங்களை காண ஆன்மிக சுற்றுலா இயக்கப்படுகிறது.

மேலும் விமான கட்டணம், நட்சத்திர ஓட்டலில் தங்குமிடம், போக்குவரத்து, காலை மற்றும் இரவு உணவு, ஜி.எஸ்.டி.யுடன் சேர்த்து கட்டணம், 41 ஆயிரத்து 150 ரூபாய். கூடுதல் விபரங்களுக்கு, 90031-40655 என்ற எண்ணில் தொடர்பு கொள்ளலாம் என அறிவிக்கப்பட்டுள்ளது.

Newsletter

கோவை விமான நிலையத்தில் வெடிகுண்டு மிரட்டல்: வதந்தி என உறுதி

கோவை விமான நிலையத்திற்கு நேற்று இரவு வெடிகுà...