பொது இடங்களில் மாடு வெட்டுவதற்கு தடை விதிக்க வேண்டும் - கோவை ஆட்சியரிடம் விஸ்வ ஹிந்து பரிஷத் அமைப்பு மனு

பக்ரீத் பண்டிகை நாளில் பொது இடங்களில் மாடுகள் இறைச்சிக்காக வெட்டப்படுவதை தடுக்க அரசும், காவல்துறையும் நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று மாவட்ட ஆட்சியரிடம் விஸ்வ ஹிந்து பரிஷத் அமைப்பினர் மனு அளித்துள்ளனர்.


கோவை: கோவை மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் விஸ்வ ஹிந்து பரிஷத் அமைப்பு சார்பில் மனு ஒன்று அளிக்கப்பட்டது. அந்த மனுவில் பக்ரீத் பண்டிகையை முன்னிட்டு பொது இடங்களில் மாடுகள் வதை செய்வதை தடுக்க கோரி வரும் 17.06.2024 அன்று பக்ரீத்-ஐ முன்னிட்டு கோவையில் செல்வபுரம், உக்கடம் ஆத்துப்பாலம் உள்ளிட்ட பல பகுதிகளில் இறைச்சிக்காக மாடுகள் பொது இடங்களில் கட்டி வைக்கப்பட்டுள்ளன.

கடந்த வருடங்களில் இது போலவே அரசு அனுமதி பெற்ற இறைச்சி கூடங்களை தவிர்த்து, பொது இடங்களில் மாடுகள் இறைச்சிக்காக வெட்டப்பட்டன. அரசின் சட்ட திட்டங்களுக்குப்பட்டு, கால்நடை மருத்துவரின் சான்றிதழ், அரசால் அங்கீகரிக்கப்பட்ட இறைச்சி கூடங்கள் மட்டும் பயன்படுத்துவது போன்ற விதிகளை பின்பற்றாமல் தொடர்ந்து மாடுகள் வெட்டப்படுவதாக அறிகிறோம்.



எனவே இதுபோன்ற நிகழ்வுகளை இந்த வருடமும் நடைபெறாமல், முன் கூட்டியே அரசும், காவல்துறையும் துரிதமாக நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று விஸ்வஹிந்து பரிஷத்தின் பசு பாதுகாப்பு அமைப்பின் சார்பில் மனு அளிக்கப்பட்டது.

Newsletter

கோவை விமான நிலையத்தில் வெடிகுண்டு மிரட்டல்: வதந்தி என உறுதி

கோவை விமான நிலையத்திற்கு நேற்று இரவு வெடிகுà...