கோவையில் காய்கறிகளின் விலை உயர்வு - ஒரு கிலோ பீன்ஸ் 100 ரூபாய்க்கு விற்பனை

கோவை டி.கே.மார்க்கெட்டில் பீன்ஸ் ஒரு கிலோ ரூ.100க்கும், பாகற்காய் ரூ.80க்கும், சின்ன வெங்காயம் ரூ.70க்கும், கேரட் ரூ.60க்கும், முட்டைக்கோஸ் ரூ.30க்கும், வெள்ளரி ரூ.30க்கும், முள்ளங்கி ரூ.50க்கும் விற்பனை செய்யப்பட்டு' வருகிறது.


கோவை: கோவை காய்கறி மார்க்கெட்டுக்கு ஊட்டி, மேட்டுப்பாளையம், தொண்டாமுத்தூர், மேட்டுப்பாளையம், ஆலாந்துறை உள்ளிட்ட பகுதிகளில் இருந்து காய்கறிகள் விற்பனைக்கு கொண்டு வரப்படுகின்றன.

இங்கு விற்பனை செய்யப்படும் காய்கறிகளை வாங்குவதற்காக கோவை மாநகர் மற்றும் சுற்று வட்டார பகுதிகளை சேர்ந்த பொதுமக்கள் அதிகளவில் வருகின்றனர். அவர்கள் மார்க்கெட்டில் தங்களுக்கு பிடித்தமான காய்கறிகளை வாங்கி செல்கின்றனர். கோவை மார்க்கெட்டில் காய்கறிகளின் விலை சற்று உயர்ந்து.

கோவை டி.கே.மார்க்கெட்டில் பீன்ஸ் ஒரு கிலோ ரூ.100க்கும், பாகற்காய் ரூ.80க்கும், சின்ன வெங்காயம்-ரூ.70க்கும் விற்பனை செய்யப்பட்டு' வருகிறது. இதேபோல்,

கேரட் ரூ.60, பீன்ஸ் ரூ.100, முட்டைக்கோஸ் ரூ.30, வெள்ளரி ரூ.30, முள்ளங்கி ரூ.50, பீட்ரூட் ரூ. 50, வெண்டை ரூ.60, காலிபிளவர் ரூ.50, மிளகாய் ரூ.100, பாகற்காய் ரூ.80, புடலங்காய் ரூ.40, முருங்கை ரூ.100, தக்காளி ரூ.60, உருளை கத்தரிக்காய் ரூ.40, வெங்காயம் ரூ.70, பெரிய வெங்காயம் ரூ.40, சேனைக்கிழங்கு ரூ.80, சேம்பு ரூ.80, இஞ்சி ரூ.160, அரசாணிக்காய் ரூ.30, எலுமிச்சை ரூ.100க்கும் விற்பனை செய்யப்படுகிறது.

Newsletter

கோவை விமான நிலையத்தில் வெடிகுண்டு மிரட்டல்: வதந்தி என உறுதி

கோவை விமான நிலையத்திற்கு நேற்று இரவு வெடிகுà...