நீட் தேர்வை ரத்து செய்யக்கோரி கோவை பிஎஸ்என்எல் அலுவலகம் முன்பு மாணவர்கள் ஆர்ப்பாட்டம்

நீட் தேர்வு மாணவர்கள் நலனுக்கான தேர்வு இல்லை. நீட் தேர்வு தொடர்பான குளறுபடி தொடர்ந்து நடந்து வருகிறது. முதலில் நீட் தேர்வு முடிவுகள் ஜூன் 15-ம் தேதி வெளியாகும் என அறிவிக்கப்பட்ட நிலையில், எவ்வித முன்னறிவிப்புமின்றி தேர்தல் முடிவுகள் வெளியிட்டு உள்ளனர் என்று ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்ட மாணவர்கள் புகார் தெரிவித்தனர்.


கோவை: கோவை மாவட்ட கலெக்டர் அலுவலகம் அருகே உள்ள பிஎஸ்என்எல் அலுவலகம் முன்பு அனைத்திந்திய மாணவர் பெருமன்றம் சார்பில் நீட் தேர்வை ரத்து செய்ய வலியுறுத்தி இன்று (14.06.24) ஆர்ப்பாட்டம் நடைபெற்றது.



நீட் தேர்வை ரத்து செய்ய வேண்டும், கல்வியை வியாபாரம் ஆக்க கூடாது என வலியுறுத்தி பாஜ அரசை கண்டித்து மாணவர்கள் கோஷம் எழுப்பினர்.



இது குறித்து மாநில துணை தலைவர் சினேகா கூறியதாவது, நீட் தேர்வு மாணவர்கள் நலனுக்கான தேர்வு இல்லை. நீட் தேர்வு தொடர்பான குளறுபடி தொடர்ந்து நடந்து வருகிறது. முதலில் நீட் தேர்வு முடிவுகள் ஜூன் 15-ம் தேதி வெளியாகும் என அறிவிக்கப்பட்ட நிலையில், எவ்வித முன்னறிவிப்புமின்றி தேர்தல் முடிவுகள் வெளியிட்டு உள்ளனர்.

மேலும், நீட் தேர்வில் 400 மதிப்பெண் எடுத்தாலும் மருத்துவ கல்வி கிடைக்காத நிலை உள்ளது. நீட் தேர்வு மூலமாக மனப்பாடம் கல்வி முறை மாற்றம், தனியார் மருத்துவக் கல்லூரியில் கட்டண கொள்ளை தடுக்க முடியும் என பாஜ கூறிய நிலையில் அதனை செய்ய முடியவில்லை. இந்த நீட் தேர்வு சமமற்ற தேர்வு.

இந்த நுழைவு தேர்வு ஏழை மாணவர்களுக்கு கை கொடுக்காது. குளறுபடிகளுக்கு 1563 பேருக்கு மட்டும் மறு தேர்வு நடத்தப்படும் என்பது தீர்வு ஆகாது. இந்த ஆண்டு நடந்த நீட் தேர்வை முழுமையாக ரத்து செய்து மீண்டும் தேர்வு நடத்த வேண்டும். இவ்வாறு அவர் கூறினார்.

Newsletter

கோவை விமான நிலையத்தில் வெடிகுண்டு மிரட்டல்: வதந்தி என உறுதி

கோவை விமான நிலையத்திற்கு நேற்று இரவு வெடிகுà...