கோவை தமிழ்நாடு வேளாண்மைப் பல்கலைக்கழகத்தில் இரத்த தானம் முகாம்

இரத்த தானம் முகாமில் பல்கலைக்கழக மாணவ, மாணவியர், கொடையாளர்கள், ஆசிரியர், ஆசிரியர் அல்லாத ஊழியர்கள், ஓட்டுநர்கள் மற்றும் தொழிலாளர்கள் உட்பட சுமார் 104 பேர் இரத்த தானம் செய்தனர்.



கோவை: உலக இரத்த தானம் தினத்தை முன்னிட்டு கோவையில் உள்ள தமிழ்நாடு வேளாண்மைப் பல்கலைக்கழகத்தில் இன்று ஜூன்.14 இரத்த தான முகாமுக்கு ஏற்பாடு செய்யப்பட்டது. கோவை அரசு மருத்துவக் கல்லூரி மற்றும் சிங்காநல்லூர் இஎஸ்ஐ மருத்துவமனை உடன் இணைந்து இந்த முகாம் நடத்தப்பட்டது. தமிழ்நாடு வேளாண்மைப் பல்கலைக்கழக துணைவேந்தர் கீதாலட்சுமி இந்த முகாமை துவக்கி வைத்தார்.

சிங்காநல்லூர் இஎஸ்ஐ மருத்துவமனையின் முதன்மையர் ரவீந்திரன், இதில் தலைமை வகித்தார். இஎஸ்ஐ ரத்த வங்கியின் தலைமை மருத்துவர் டாக்டர் உமாசரோஜினி தனது குழுவினருடன் முகாமை நடத்தினார். இந்நிகழ்வில் பல்கலைக்கழக மாணவ, மாணவியர். கொடையாளர்கள், ஆசிரியர் மற்றும் ஆசிரியர் அல்லாத ஊழியர்கள், ஓட்டுநர்கள் மற்றும் தொழிலாளர்கள் உட்பட சுமார் 104 பேர் இரத்த தானம் செய்தனர்.



முகாம் துவங்குவதற்கு முன்பாக வேளாண்மைப் பல்கலைக்கழக நாட்டு நலப்பணித்திட்டத்தின் 200 மாணவர்கள் இரத்த தான விழிப்புணர்வு பேரணியை நடத்தினர். பல்கலைக்கழகத்தின் மாணவர் நலத்துறை முதன்மையர் முனைவர் மரகதம் பேரணியை துவக்கி வைத்தார்.

நாட்டு நலப்பணித்திட்டத்தின் அலுவலர்களும் ஒருங்கிணைப்பாளரும் கலந்து கொண்டனர். பேரணியில் மாணவ, மாணவியர் இரத்த தானத்தின் முக்கியத்துவம் மற்றும் பயன்களை பொதுமக்களிடம் பகிர்ந்து கொண்டனர்.

Newsletter

கோவையில் ஒரே நாளில் 600க்கும் மேற்பட்ட தெருநாய்களுக்கு வெறிநாய்க்கடி தடுப்பூசி

Coimbatore மாநகராட்சி வார்டு 50, 51, 52, 54, 100 பகுதிகளில் வெறிநாய்க்கடி தடுப்பூசி திட்டத்தை தீவிரப்படுத்தி, கால்நடை மர...

Multiple LPG Cylinders Explode at Migrant Workers’ Quarters in Coimbatore’s Nava India

More than 40 temporary sheds were gutted after seven LPG cylinders exploded one after another at a migrant workers’ colo...

கோவை நவ இந்தியாவில் அடுத்தடுத்து வெடித்த 7 சமையல் எரிவாயு சிலிண்டர்கள்

கோவை நவ இந்தியா பகுதியில் வடமாநிலத் தொழிலாளர்கள் தங்கியிருந்த தற்காலிகக் குடியிருப்பில் அடுத்தடுத்து 7 சமையல் எரிவாயு சி...

கோவை கற்பகம் நிகர்நிலை பல்கலைக்கழகத்தில் இணையக் குற்ற விழிப்புணர்வு நிகழ்ச்சி

கோவை, கற்பகம் நிகர்நிலை பல்கலைக்கழகத்தில் ஆகஸ்ட் 27, 2026 அன்று இணையக் குற்ற விழிப்புணர்வு நிகழ்ச்சி நடைபெற்றது. கூடுதல்...

மேட்டுப்பாளையம் துணை மின் நிலையத்தில் நாளை (29.08.2026) மின்தடை

மேட்டுப்பாளையம் துணை மின் நிலையத்தில் மாதாந்திர பராமரிப்பு பணிகள் நாளை (29.08.2026) காலை 9 மணி முதல் மாலை 5 மணி வரை நடைப...

பசூர் துணை மின் நிலையத்தில் நாளை (29.08.2026) மின்தடை

பசூர் துணை மின் நிலையத்தில் நாளை ஆகஸ்ட் 29 அன்று காலை 9 மணி முதல் மாலை 5 மணி வரை மாதாந்திர மின் பராமரிப்பு பணி நடைபெறும்...