கோவை குனியமுத்தூரில் ஜாக் அமைப்பின் சார்பில் பக்ரீத் பண்டிகை கொண்டாட்டம்

கோவையில் ஜாக் அமைப்பின் சார்பில் இஸ்லாமியர்கள் பக்ரீத் பண்டிகையில் ஈடுபட்டனர்; குனியமுத்தூர் ஆயிஷா மஹாலில் கூடிய மக்கள் தியாகத்தை நினைவுகூறி வெகு சிறப்பாக கொண்டாடினர்.


கோவை: இறைவனின் தூதரான இப்ராகிமின் தியாகத்தை நினைவு கூறும் வகையில் ஆண்டுதோறும் இஸ்லாமியர்கள் பக்ரீத் பண்டிகையை கொண்டாடி வருகிறார்கள்.



அதன்படி கோவை குனியமுத்தூரில் உள்ள ஆயிஷா மஹால் வளாகம் ஜாக் அமைப்பின் சார்பில் இஸ்லாமியர்கள் பக்ரீத் பண்டிகையை கொண்டாடினார்.

இதையொட்டி கோவையில் பல்வேறு இடங்களில் உள்ள மசூதிகள், திறந்தவெளி மைதானங்களில் ஜாக் அமைப்பின் சார்ப்பில் தொழுகை நடத்த ஏற்பாடு செய்யப்பட்டு இருந்தது.



தொழுகை முடிந்ததும் ஒருவருக்கு ஒருவர் கட்டிப்பிடித்து வாழ்த்துக்களை பரிமாறிக்கொண்டனர்.



இந்த தொழுகையின் போது இஸ்லாமியர்கள் புத்தாடை அணிந்து இருந்தனர்.

பின்னர் இப்ராகிமின் தியாகத்தை நினைவுகூறும் வகையில் வீடுகளில் ஆடு, மாடு ஆகியவற்றை பலியிட்டு அவற்றை 3 பங்காக பிரித்து அதில் ஒரு பங்கை நண்பர்களுக்கும், மற்றொரு பங்கை ஏழைகளுக்கும், 3-வது பங்கை தங்களுக்கும் எடுத்துக்கொண்டனர்.

Newsletter

கோவை விமான நிலையத்தில் வெடிகுண்டு மிரட்டல்: வதந்தி என உறுதி

கோவை விமான நிலையத்திற்கு நேற்று இரவு வெடிகுà...