கேரளாவில் திருச்சூர், பாலக்காடு மாவட்டங்களில் நிலநடுக்கம்: பொதுமக்கள் பீதி

கேரளாவின் திருச்சூர், பாலக்காடு மாவட்டங்களில் லேசான நிலநடுக்கத்தால் பொதுமக்கள் பீதியடைந்துள்ளார்கள். இந்த நிலநடுக்கம் ரிக்டரில் 3.0 ஆக பதிவாகி உள்ளது.


திருவனந்தபுரம்: கேரளாவில் திருச்சூர், பாலக்காடு மாவட்டங்களில் இன்று 2-வது நாளாக இன்று அதிகாலையில் நிலநடுக்க அதிர்வுகள் ஏற்பட்டதால் பொதுமக்கள் பீதியடைந்துள்ளனர். இது ரிக்டரில் 3.0 ஆக பதிவாகி உள்ளது.

கேரளாவின் திருச்சூர், பாலக்காடு மாவட்டங்களில் நேற்று காலை லேசான நில அதிர்வுகள் ஏற்பட்டன. இதனால் அச்சமடைந்த பொதுமக்கள் வீடுகளை விட்டு வெளியேறி சாலைகளில் தஞ்சமடைந்தனர்.

திருச்சூர் மாவட்டத்தில் நேற்று காலை 8.15 மணிக்கு குன்னம்குளம், எருமப்பட்டி, பழஞ்சி உட்பட பல இடங்களில் லேசான நில அதிர்வு ஏற்பட்டது. அப்போது வீடுகளில் இருந்த பாத்திரங்கள் உருண்டு விழுந்தன. சில இடங்களில் வீடுகள் குலுங்கி இருக்கின்றன. இந்த நில அதிர்வுகள் சில வினாடிகள் நீடித்ததால் பொதுமக்கள் அச்சமடைந்து வீடுகளை விட்டு வெளியேறி சாலைகளை நோக்கி ஓடினர்.

இதேபோல பாலக்காடு மாவட்டத்தின் சாலிசேரி, கக்காட்டிரி, திருமிற்றக்கோடு, எழுமங்காடு, குமாரநெல்லூர் உள்ளிட்ட பல பகுதிகளிலும் நில அதிர்வு ஏற்பட்டது. அங்கும் பொதுமக்கள் பெரும் அச்சமடைந்தனர்.

கேரளாவின் திருச்சூர், பாலக்காடு மாவட்டங்களில் ஏற்பட்ட நில அதிர்வு, ரிக்டரில் 3.0 ஆக பதிவாகி இருந்தது. இந்த லேசான நிலநடுக்கத்தால் எந்தவித பாதிப்புகளும் பதிவாகவில்லை.

இந்த நிலையில் இன்று அதிகாலையிலும் திருச்சூர், பாலக்காடு மாவட்டங்களில் நில அதிர்வுகள் உணரப்பட்டன. இன்று காலை 3.55 மணிக்கு நிலநடுக்க அதிர்வுகளை உணர்ந்ததாக பொதுமக்கள் தெரிவித்துள்ளனர். இந்த மிதமான நிலநடுக்கத்தால் பொதுமக்கள் பீதியும் அச்சமும் அடைய வேண்டாம் என மாவட்ட நிர்வாகங்கள் வேண்டுகோள் விடுத்துள்ளன.

Newsletter

கோவை விமான நிலையத்தில் வெடிகுண்டு மிரட்டல்: வதந்தி என உறுதி

கோவை விமான நிலையத்திற்கு நேற்று இரவு வெடிகுà...