கோவை கரும்புக்கடை இஸ்லாமிக் மெட்ரிக் பள்ளியில் பக்ரீத் சிறப்பு தொழுகை

கோவை கரும்புக்கடை இஸ்லாமிய மெட்ரிக் மேல்நிலைப் பள்ளி வளாகத்தில் பக்ரீத் சிறப்பு தொழுகையில் ஆயிரக்கணக்கானோர் குடும்பத்துடன் ஈடுபட்டனர்.


கோவை: நாடுமுழுவதும் இன்று பக்ரீத் பண்டிகையை முன்னிட்டு இஸ்லாமியர்கள் சிறப்பு தொழுகையில் ஈடுபட்டனர். அதன் ஒரு பகுதியாக கோவை கரும்புக்கடை பகுதியில் உள்ள இஸ்லாமிய மெட்ரிக் மேல்நிலைப் பள்ளி வளாகத்தில் ஆயிரக்கணக்கான இஸ்லாமிய மக்கள் குடும்பத்துடன் இன்று சிறப்பு தொழுகையில் ஈடுபட்டனர்.

பக்ரீத் பண்டிகை இஸ்லாமியர்களின் முக்கிய பண்டிகைகளில் ஒன்று. இயன்றதை பிறருக்கு உதவவேண்டும், என்ற உயரிய நோக்கோடு இந்த பண்டிகை கொண்டாடப்படுகிறது. மேலும் இஸ்லாமியர்களின் 5 கடமைகளில் ஒன்றான ஹஜ் பயனமும் இந்த மாதத்தில் நடைபெற்று, அங்கு பொதுமக்கள் தங்களின் தொழுகை கடமையை நிறைவேற்றுவார்கள் என்பது குறிப்பிடத்தக்கது.

மேலும், பக்ரீத் தொழுகை முடிந்த பிறகு பணவசதி படைத்தவர்கள் தாங்கள் வளர்த்திவந்த ஆடு, மாடுகளை பலியிட்டு உற்றார், உறவினர்களுக்கும், ஏழை மக்களுக்கும் வழங்குவார்கள்.

பொருளாதாரத்தில் நடுத்தரமான மக்கள் நான்கு அல்லது அதற்கு மேற்பட்டோர் கூட்டாக சேர்ந்து கூட்டு குர்பான் என்ற பெயரில் அனைவருக்கும் உதவுவார்கள்.

இந்த நிலையில், கோவை கரும்புக்கடை பகுதியில் உள்ள இஸ்லாமிக் மெட்ரிக் மேல்நிலை பள்ளியில் நடைபெற்ற சிறப்பு தொழுகையில் ஈடுபட்ட மக்கள் ஒருவருக்கொருவர் ஆரத்தழுவி தங்களது மகிழ்ச்சியையும், வாழ்த்துகளையும் பரிமாறிக்கொண்டனர்.

Newsletter

வால்பாறை மலைப்பாதையில் சுற்றுலா வேன் விபத்து: 8 பேர் உயிரிழப்பு..!

வால்பாறை - பொள்ளாச்சி மலைப்பாதையில் சுற்றுலா பயணிகளை ஏற்றிச் சென்ற டெம்போ டிராவலர் வேன் பள்ளத்தில் கவிழ்ந்ததில் 8 பேர் உ...

சேப்பாக்கம் வெற்றியை விட, கோவை தெற்கு, வடக்கு வெற்றியே முக்கியம்: உதயநிதி ஸ்டாலின்

கோவையில் பிரச்சாரம் செய்த துணை முதல்வர் உதயநிதி ஸ்டாலின், சேப்பாக்கத்தில் தனது வெற்றியை விட கோவை தெற்கு மற்றும் வடக்கு த...

சேப்பாக்கம் வெற்றியை விட கோவை தெற்கு, வடக்கு வெற்றியே முக்கியம்: துணை முதல்வர் உதயநிதி ஸ்டாலின்

கோவையில் தேர்தல் பிரச்சாரத்தில் ஈடுபட்ட துணை முதலமைச்சர் உதயநிதி ஸ்டாலின், சேப்பாக்கத்தில் தனது வெற்றியை விட கோவை தெற்கு...

தீரன் சின்னமலையின் 271வது பிறந்தநாளை முன்னிட்டு அவிநாசி திமுக வேட்பாளர் Dr. கோகிலாமணி மரியாதை..!

சுதந்திரப் போராட்ட வீரர் தீரன் சின்னமலையின் பிறந்தநாளை முன்னிட்டு, அவிநாசி தொகுதியில் மதச்சார்பற்ற முற்போக்கு கூட்டணியின...

உடுமலையில் திமுகவினர் மீது தேர்தல் பொதுப் பார்வையாளரிடம் அதிமுக வழக்கறிஞர்கள் புகார்..!

உடுமலையில் இன்று துணை முதல்வர் உதயநிதி ஸ்டாலின் தேர்தல் பரப்புரைக்காக, அனுமதி வழங்கப்பட்ட இடத்தில் பிரச்சாரம் நடத்தாமல்,...

தேர்தலுக்கு பிறகு ‘மொத்த தோல்வி பழனிச்சாமி’ ஆக மாறுவார்: பொள்ளாச்சியில் துணை முதல்வர் உதயநிதி ஸ்டாலின் பிரச்சாரம்..!

உடுமலை, வால்பாறை மற்றும் பொள்ளாச்சி தொகுதியில் போட்டியிடும் மதசார்பற்ற கூட்டணியின் வேட்பாளர்களை ஆதரித்து, பொள்ளாச்சி அரு...