அமராவதி வனப்பகுதியில் காயம் அடைந்த ஆண் புலிக்கு சிகிச்சை அளித்து வனப்பகுதியில் விடுவிப்பு

மஞ்சம்பட்டி வன பகுதியில் காயத்துடன் நடக்கமுடியாமல் இருந்த ஆண் புலியை வனத்துறையினர் மயக்க ஊசி செலுத்தி பிடித்து வயிற்று பகுதியில் சிக்கியிருந்த கயிற்றை அகற்றி மீண்டும் வனப்பகுதியில் விடுவித்தனர்.


திருப்பூர்: திருப்பூர் மாவட்டம் உடுமலை அருகே ஆனைமலை புலிகள் காப்பகத்தில் உள்ள அமராவதி வனச்சரகத்தில் யானை, புலி, சிறுத்தை, கரடி, உள்ளிட்ட வனவிலங்குகள் அதிகளவில் வாழ்ந்து வருகின்றன.

இந்நிலையில் அமராவதி வனச்சரகத்திற்கு உட்பட்ட மஞ்சம்பட்டி வன பகுதியில் வேட்டை தடுப்பு காவலர்கள் ரோந்து பணியில் ஈடுபட்டிருந்தபோது புலி ஒன்று உடலில் காயங்களுடன் நடக்க முடியாமல் இருந்ததை கண்டு வனத்துறை அதிகாரிகளுக்கு தகவல் தெரிவித்துள்ளனர்.

இதனை அடுத்து ஆனைமலை புலிகள் காப்பக கள இயக்குனர் ராமசுப்பிரமணியம், மருத்துவ குழுவினருடன் சென்று புலியை கண்காணித்து வந்துள்ளனர். அப்போது கடந்த சில தினங்களுக்கு முன்பு புலியின் வயிற்றுப் பகுதியில் கயிறு ஒன்று மாட்டி இருந்ததாகவும், அதனால் புலியின் வயிற்றுப் பகுதியில் பெரிய அளவில் காயம் ஏற்பட்டுள்ளதால் புலி நடக்க முடியாமல் தவித்து வந்ததையும் வனத்துறையினர் உறுதி செய்தனர்.

பின்பு புலிக்கு சிகிச்சை அளிக்க ஏற்பாடு செய்த வனத்துறையினர், ஆனைமலை புலிகள் காப்பக வன கால்நடை மருத்துவர் விஜயராகவன் தலைமையில் புலிக்கு மயக்க ஊசி செலுத்தி கூண்டில் அடைத்து சிகிச்சை அளித்து உடலில் சிக்கியிருந்த கயிற்றை அகற்றினர்.



பின்பு கூண்டில் வைத்து புலியின் உடல் நிலையை வனத்துறை கண்காணித்து வந்த நிலையில் புலி ஆரோக்கியத்துடன் இருப்பதால் மயக்கம் தெளிந்த உடன் புலியை மீண்டும் கூண்டிலிருந்து வெளியேற்றி வனப்பகுதிக்குள் விடப்பட்டு அப்பகுதியில் வனத்துறை வேட்டை தடுப்பு காவலர்கள் தொடர்ந்து புலியின் நடமாட்டத்தை கண்காணித்து வருகின்றனர்.

மேலும் கயிறு அறுக்கப்பட்டு காயம் ஏற்பட்ட இருந்த நிலையில் காயத்தின் தீவிரம், அதனால் ஏதேனும் தொற்று ஏற்பட்டுள்ளதா என ஆய்வு செய்வதற்காக புலியின் உடலில் இருந்து ரத்த மாதிரிகள் சேகரித்து ஆய்வகத்துக்கு அனுப்பி ஆய்வு செய்து வருவதாக கோவை மண்டல தலைமை வன பாதுகாவலரும், ஆனைமலை புலிகள் காப்பகத்தின் கள இயக்குனருமான ராமசுப்பிரமணியம் தெரிவித்துள்ளார்.

Newsletter

கோவை அரசு மருத்துவமனையில் இருந்து கைதி தப்பியோட்டம்: ஆந்திரா போலீசாரை ஏமாற்றிய மோசடி நபர் மீண்டும் எஸ்கேப்

கோவை அரசு மருத்துவமனையின் கைதிகள் வார்டில் சிகிச்சை பெற்று வந்த மோசடி வழக்கில் கைதான ஆந்திராவைச் சேர்ந்த பிம்முடு அஜித்க...

“மின்தேவைக்கு ஏற்ப கட்டமைப்பபை உருவாக்க தவறிய திமுக” - கோவையில் அமைச்சர் செங்கோட்டையன் குற்றச்சாட்டு.

ரூ.7,000 கோடிக்கும் மேல் செலவிடப்பட்டதாக கூறப்பட்டாலும், மின்கட்டமைப்பு மேம்பாட்டு பணிகளுக்காக வெறும் ரூ.627 கோடி மட்டும...

கோவையில் மாணவர்களுக்கு ஆபாச பதிவுகள் அனுப்பிய ஆசிரியர் போக்சோவில் கைது

கோவையில் உள்ள தனியார் பள்ளியில் மாணவர்களுக்கு வாட்ஸ்-அப் மூலம் ஆபாச புகைப்படங்கள், வீடியோக்கள் அனுப்பியதாக குற்றம்சாட்டப...

சாமானியர்களை வாட்டும் எரிவாயு விலை உயர்வு; காங்கிரஸ் சார்பில் திருப்பூரில் தெருமுனைப் பிரச்சாரம்..!

பெட்ரோல், டீசல் மற்றும் சமையல் எரிவாயு விலை உயர்வை கண்டித்து திருப்பூரில் காங்கிரஸ் கட்சியினர் தெருமுனைப் பிரச்சாரம் நடத...

வெளிநாட்டு பறவைகள் வருகையை முன்னிட்டு பெரியகுளம், வாலாங்குளத்தில் ஆகாயத்தாமரை அகற்றும் பணி தீவிரம்

ஜூலையில் வெளிநாட்டுப் பறவைகள் வருகை மற்றும் தென்மேற்குப் பருவமழையை முன்னிட்டு, கோவையின் பெரியகுளம் மற்றும் வாலாங்குளத்தி...

ரூ.50 லட்சம் கேட்டு கோவையை சேர்ந்த இருவர் கடத்தல்: 2 காவலர்கள் பணியிடை நீக்கம்; மேலும் ஒருவர் கைது

கோவையை சேர்ந்த இருவரை ரூ.50 லட்சம் கேட்டு கடத்தப்பட்ட வழக்கில் கைதான தலைமை காவலர்களான ஆனந்தன் மற்றும் மோகன் ஆகிய இருவரைய...