கோவை விமான நிலையத்துக்கு வெடிகுண்டு மிரட்டல் - அதிகாரிகள் சோதனையில் புரளி என்பது கண்டுபிடிப்பு

கோவை சர்வதேச விமான நிலையத்திற்கு அடையாளம் தெரியாத நபர் ஒருவர் இ-மெயில் மூலம் இன்று வெடிகுண்டு மிரட்டல் விடுத்து உள்ளார். இதுதொடர்பாக அதிகாரிகள் நடத்திய சோதனையில், அது புரளி என்பது தெரியவந்துள்ளது.


கோவை: கோவை அவினாசி சாலை சித்ராவில் சர்வதேச விமானநிலையம் உள்ளது. இங்கு இருந்து சென்னை, மும்பை, டெல்லி, ஹைதராபாத் உள்பட பல்வேறு நகரங்களுக்கும், சிங்கப்பூர், சார்ஷா ஆகிய வெளிநாடுகளுக்கும் விமானங்கள் இயக்கப்பட்டு வருகின்றன. நாள் ஒன்றுக்கு தினமும் 35-க்கும் மேற்பட்ட விமானங்கள் இயக்கப்படுகின்றன. இதனால் இங்கு எப்போதும் அதிகம் அளவில் மக்கள் வந்து செல்வார்கள்.

இந்தநிலையில் கோவை சர்வதேச விமான நிலையத்திற்கு அடையாளம் தெரியாத நபர் ஒருவர் இன்று ஜூன்.18 மதியம் 1.30 மணியளவில் இ-மெயில் (மின்னஞ்சல்) மூலம் வெடிகுண்டு மிரட்டல் விடுத்து உள்ளார். அதில், 'விமான நிலையத்தில் வெடிகுண்டுகள் வைக்கப்பட்டு உள்ளன. அது எப்போது வேண்டுமானாலும் வெடிக்கலாம்' என்று அந்த இ-மெயிலில் தெரிவிக்கப்பட்டு இருந்தது. பின்னர் இதுகுறித்து விமானநிலைய அதிகாரிகள் உஷார் அடைந்தனர்.

தொடர்ந்து அவர்கள் விமானநிலைய மத்திய தொழில் பாதுகாப்பு படை அதிகாரிகள் (சி.ஐ.எஸ்.எப்.), மாநகர போலீசாருக்கு தகவல் கொடுத்தனர். இந்த வெடிகுண்டு மிரட்டல் வழக்கமான புரளியாக இருக்கலாம் என்று போலீசார் சந்தேகிக்கின்றனர். எனினும் முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக கோவை விமான நிலையத்தின் வாகனங்கள் நிறுத்தும் இடம், சரக்கு பார்சல்கள் ஏற்றும் இடங்கள், பயணிகள் வருகை, வெளியேறும் பகுதி உள்பட பல்வேறு முக்கியமான இடங்களில் மத்திய தொழில் பாதுகாப்பு படையினர், வெடிகுண்டு கண்டறியும் மோப்ப நாய் பிரிவு, வெடிகுண்டு கண்டறிதல் மற்றும் செயலிழக்கும் படை, மாநகர போலீசார் தீவிர பாதுகாப்பு நடவடிக்கையில் ஈடுபட்டனர்.

விமான நிலையத்துக்கு சந்தேக நிலையில் வரும் வாகனங்களை தடுத்து நிறுத்தி சோதனை செய்தனர். பின்னர் இது புரளி என்பது தெரியவந்தது. அத்துடன் இதுபோன்று சென்னை, கோவை உள்பட நாடுமுழுவதும் பல்வேறு விமானநிலைங்களுக்கு இ-மெயிலில் வெடிகுண்டு மிரட்டல் விடுத்ததும், இது புரளி என்பதும் தெரியவந்தது.

கடந்த மே மாதமும் இதுபோன்று இ-மெயிலில் விமானநிலையங்களுக்கு வெடிகுண்டு மிரட்டல் விடுத்தது குறிப்பிடத்தக்கது. பின்னர் இதுகுறித்து கோவை விமானநிலைய இயக்குனர் செந்தில்வளவன் கூறுகையில், நாடுமுழுவதும் உள்ள விமான நிலையங்களுக்கு இதுபோன்று இ-மெயில் மூலம் வெடிகுண்டு மிரட்டல் விடுக்கப்பட்டு உள்ளது. இருப்பினும் கோவை விமானநிலையத்திற்கு வந்த மிரட்டல் தொடர்பாக வெடிகுண்டு கண்டறிந்தல், அழித்தல் குழு, மத்திய தொழில் பாதுகாப்பு படை, வெடிகுண்டு கண்டறியும் மோப்பநாய் படைக்கு எச்சரிக்கை விடுக்கப்பட்டு அனைத்து பாதுகாப்பு ஏற்பாடுகளும் தீவிரப்படுத்தி உள்ளோம் என்றார்.

Newsletter

கோவை விமான நிலையத்தில் வெடிகுண்டு மிரட்டல்: வதந்தி என உறுதி

கோவை விமான நிலையத்திற்கு நேற்று இரவு வெடிகுà...