கோவையில் கார்த்திக் ராஜாவின் இசை நிகழ்ச்சி குறித்த செய்தியாளர் சந்திப்பு

கோவையில் இசையமைப்பாளர் கார்த்திக் ராஜாவின் இசை நிகழ்ச்சி குறித்த செய்தியாளர் சந்திப்பு ஜூன் 16ல் கேரளா கிளப்பில் நடைபெற்றது.


கோவை: ஆகஸ்ட் மாதம் 17ம் தேதி இந்துஸ்தான் கலை அறிவியல் கல்லூரியில் இசையமைப்பாளர் கார்த்திக் ராஜாவின் இசை நிகழ்ச்சி நடைபெற உள்ளது. அதனை முன்னிட்டு செய்தியாளர் சந்திப்பு கோவையில் இந்து அலுவலகம் அருகே உள்ள கேரளா கிளப்பில் ஜூன்.16 நடைபெற்றது.

இதில் செய்தியாளர்களை சந்தித்த கார்த்திக்ராஜா, இந்நிகழ்ச்சியை மலேசியாவில் நடத்த திட்டமிட்டிருந்ததாகவும் அங்கு ஏற்பட்ட சில குழப்பங்களால் இங்குப்இந்த நிகழ்ச்சியை இடம் மாற்றி ஏற்பாடு செய்துள்ளதாக தெரிவித்தார். கோவையில் இது என்னுடைய முதல் நிகழ்ச்சி எனவும் கூறினார். 

இந்நிகழ்ச்சியில்இளையராஜாவின் பாடல்களும் இடம் பெறும் எனவும் 3-4 மணி நேரம் இந்த நிகழ்ச்சி நடைபெறும் என கூறினார். மக்களைப் பார்த்து இலவசமாக பாட சொல்லினாலும் பாடுவேன் எனவும் தெரிவித்தார். பாடல்களின் ரசனை ஒவ்வொரு ஊருக்கும் மாறும் என தெரிவித்த அவர் உதாரணத்திற்கு நம்மூர் மக்களுக்கு மதுர மரிக்கொழுந்து பாடல்கள் பிடிக்கும் என்றால் வெளியூர்களில் வேறு விதமான பாடல்கள் பிடிக்கும் என கூறினார். அது மட்டுமின்றி தமிழ் சினிமா இசை என்றாலே அனைவரும் ஆர்வமாக இருப்பதாகவும் கூறினார். 

மேலும் காப்புரிமை குறித்து ஆய்வு மேற்கொண்டு பாடல்களை தேர்ந்தெடுத்துள்ளதாகவும் அதை மட்டுமே பாட உள்ளதாகவும் தெரிவித்தார். அப்பா இளையராஜாவின் பாடல்களையும் எழுத்துப்பூர்வமாக அனுமதி பெற்று தான் பாட உள்ளதாக தெரிவித்தார்.

முன்பெல்லாம் பாடல்கள் அதிக நேரம் இருந்த நிலையில் தற்போது பாடலின் நேரம் குறைந்து விட்டது குறித்தான கேள்விக்கு தற்பொழுது எல்லாம் ஃபாஸ்ட் ஃபுட் போல் பாடல்கள் ஆகிவிட்டதாகவும் முன்பெல்லாம் இலையில் பலகாரங்கள் அனைத்தும் வைத்து இருப்போம் தற்பொழுது பர்கர் போல் மாறிவிட்டது என பதிலளித்தார்.

வல்கரானபாடல்கள் தற்பொழுது அதிகரித்து வருவதை குறித்து கேள்வி எழுப்பியதற்கு இதுபோன்ற பாடல்கள் அப்பொழுது இருந்தே இருப்பதாக பதில் அளித்தார். அடுத்த இரண்டு மாதங்களில் தனது இசையில் இரண்டு படங்கள் வெளியாவதாக தெரிவித்தார்.

இறுதியாக அவரிடம் கேட்டுக் கொண்டதற்கிணங்க "தென்றல் வந்து தீண்டும் போது" பாடலை பாடினார்.

Newsletter

கோவையில் ஒரே நாளில் 600க்கும் மேற்பட்ட தெருநாய்களுக்கு வெறிநாய்க்கடி தடுப்பூசி

Coimbatore மாநகராட்சி வார்டு 50, 51, 52, 54, 100 பகுதிகளில் வெறிநாய்க்கடி தடுப்பூசி திட்டத்தை தீவிரப்படுத்தி, கால்நடை மர...

Multiple LPG Cylinders Explode at Migrant Workers’ Quarters in Coimbatore’s Nava India

More than 40 temporary sheds were gutted after seven LPG cylinders exploded one after another at a migrant workers’ colo...

கோவை நவ இந்தியாவில் அடுத்தடுத்து வெடித்த 7 சமையல் எரிவாயு சிலிண்டர்கள்

கோவை நவ இந்தியா பகுதியில் வடமாநிலத் தொழிலாளர்கள் தங்கியிருந்த தற்காலிகக் குடியிருப்பில் அடுத்தடுத்து 7 சமையல் எரிவாயு சி...

கோவை கற்பகம் நிகர்நிலை பல்கலைக்கழகத்தில் இணையக் குற்ற விழிப்புணர்வு நிகழ்ச்சி

கோவை, கற்பகம் நிகர்நிலை பல்கலைக்கழகத்தில் ஆகஸ்ட் 27, 2026 அன்று இணையக் குற்ற விழிப்புணர்வு நிகழ்ச்சி நடைபெற்றது. கூடுதல்...

மேட்டுப்பாளையம் துணை மின் நிலையத்தில் நாளை (29.08.2026) மின்தடை

மேட்டுப்பாளையம் துணை மின் நிலையத்தில் மாதாந்திர பராமரிப்பு பணிகள் நாளை (29.08.2026) காலை 9 மணி முதல் மாலை 5 மணி வரை நடைப...

பசூர் துணை மின் நிலையத்தில் நாளை (29.08.2026) மின்தடை

பசூர் துணை மின் நிலையத்தில் நாளை ஆகஸ்ட் 29 அன்று காலை 9 மணி முதல் மாலை 5 மணி வரை மாதாந்திர மின் பராமரிப்பு பணி நடைபெறும்...