கோவை மாநகராட்சியில் வளர்ச்சித் திட்டப்பணிகள் - மாநகராட்சி ஆணையாளர் நேரில் ஆய்வு

குறிச்சி, குனியமுத்தூர் பகுதிகளுக்கான மேல்நிலை நீர்த்தேக்கத் தொட்டி, தார் சாலை அமைக்கும் பணி, அங்கன்வாடி மையம் உள்ளிட்ட பல்வேறு வளர்ச்சி திட்டப்பணிகளை மாநகராட்சி ஆணையாளர் சிவகுருபிரபாகரன் நேரில் சென்று பார்வையிட்டு ஆய்வு செய்தார்.



கோவை: கோயம்புத்தூர் மாநகராட்சி, தெற்கு மண்டல பகுதிகளில் நடைபெற்றுவரும் பல்வேறு வளர்ச்சி திட்டப்பணிகளை மாநகராட்சி ஆணையாளர் மா.சிவகுரு பிரபாகரன் இன்று (19.06.2024) நேரில் சென்று பார்வையிட்டு ஆய்வு மேற்கொண்டார்.



கோயம்புத்தூர் மாநகராட்சி, தெற்கு மண்டலம் வார்டு எண்.97க்குட்பட்ட பிள்ளையார்புரம் பகுதியில் கோயம்புத்தூர் மாநகராட்சியுடன் இணைக்கப்பட்ட குறிச்சி, குனியமுத்தூர் பகுதிகளுக்கான குடிநீர் பகிர்மான அபிவிருத்தி திட்டத்தின்கீழ் அமைக்கப்பட்டுள்ள சுமார் 20 இலட்சம் லிட்டர் கொள்ளளவு கொண்ட மேல்நிலை நீர்த்தேக்கத் தொட்டியினை மாநகராட்சி ஆணையாளர் மா.சிவகுரு பிரபாகரன், நேரில் சென்று பார்வையிட்டு ஆய்வு மேற்கொண்டார்.



தமிழ்நாடு முதலமைச்சரின் சிறப்பு திட்டமான உங்களைத் தேடி உங்கள் ஊரில் திட்டத்தின் கீழ் மாநகராட்சி ஆணையாளர், தெற்கு மண்டலம் வார்டு எண்.97க்குட்பட்ட லெண்டஸ் கார்டன் பகுதியில் நமக்கு நாமே திட்டத்தின் கீழ் ரூ.66.00 இலட்சம் மதிப்பீட்டில் புதிதாக அமைக்கப்படவுள்ள தார் சாலை பணியினையும், பிள்ளையார்புரம் பகுதியில் கோயம்புத்தூர் மாநகராட்சியுடன் இணைக்கப்பட்ட குறிச்சி, குனியமுத்தூர் பகுதிகளுக்கான குடிநீர் பகிர்மான அபிவிருத்தி திட்டத்தின்கீழ் அமைக்கப்பட்டுள்ள சுமார் 20 இலட்சம் லிட்டர் கொள்ளளவு கொண்ட மேல்நிலை நீர்த்தேக்கத் தொட்டியினை மாநகராட்சி ஆணையாளர் மா.சிவகுரு பிரபாகரன், நேரில் சென்று பார்வையிட்டு ஆய்வு மேற்கொண்டார்.



வார்டு எண்.96-க்குட்பட்ட லோகநாதபுரம் ஆகிய பகுதிகளில் கோயம்புத்தூர் மாநகராட்சியுடன் இணைக்கப்பட்ட குறிச்சி, குனியமுத்தூர் பகுதிகளுக்கான குடிநீர் பகிர்மான அபிவிருத்தி திட்டத்தின்கீழ் அமைக்கப்பட்டுள்ள சுமார் 20 இலட்சம் லிட்டர் கொள்ளளவு கொண்ட மேல்நிலை நீர்த்தேக்கத் தொட்டிகளையும்,



வார்டு எண்.94க்குட்பட்ட மாச்சம்பாளையம், துளிசி கார்டன் பகுதியில் சுமார் 12.50 இலட்சம் லிட்டர் கொள்ளளவு கொண்ட மேல்நிலை நீர்த்தேக்கத் தொட்டியினையும் நேரில் சென்று பார்வையிட்டு ஆய்வு மேற்கொண்டார்.



அதனைத்தொடர்ந்து, தமிழ்நாடு முதலமைச்சரின் சிறப்பு திட்டமான உங்களைத் தேடி உங்கள் ஊரில் திட்டத்தின் கீழ் தெற்கு மண்டலம் வார்டு எண்.97க்குட்பட்ட செங்கோட்டையா நினைவு உயர்நிலைப்பள்ளி, வார்டு எண்.95க்குட்பட்ட என்.பி. இட்டேரி நகர்ப்புற நலவாழ்வு மையம் மற்றும்



வார்டு எண்.99க்குட்பட்ட போத்தனூர் செட்டிபாளையம் சாலை, மாநகராட்சி பூங்கா ஆகிய இடங்களில் நடைபெற்ற சிறப்பு முகாமில் பொதுமக்களிடமிருந்து கோரிக்கை மனுக்களை மாநகராட்சி ஆணையாளர், பெற்றுக்கொண்டு, பெறப்பட்ட மனுக்களின் மீது உரிய நடவடிக்கை எடுக்க துறை சார்ந்த அலுவலர்களிடம் அறிவுறுத்தினார்.



முன்னதாக, தெற்கு மண்டலம் வார்டு எண்.95க்குட்பட்ட குறிச்சி பிரிவு பகுதியில் செயல்பட்டுவரும் அங்கன்வாடி மையத்தினை மாநகராட்சி ஆணையாளர் அவர்கள் நேரில் சென்று பார்வையிட்டு அங்கன்வாடி மையத்தில் தயாரிக்கப்படும் உணவுகள் சுகாதாரமான முறையில் தரமான உணவுகள் வழங்கப்படுகிறதா என்பதையும் மற்றும் உணவுப் பொருட்களின் இருப்பு குறித்த பதிவேடுகளையும் ஆய்வு செய்தார்.



மேலும், வார்டு எண் 100க்குட்பட்ட கணேசபுரம் மாநகராட்சி நடுநிலைப்பள்ளியினையும் நேரில் சென்று பார்வையிட்டு ஆய்வு மேற்கொண்டு மாணவ, மாணவியர்களுடன் வகுப்பறையில் அமர்ந்து கலந்துரையாடினார்.



அதனைத் தொடர்ந்து தெற்கு மண்டல அலுவலக வளாகத்தில் வார்டு பகுதிகளில் பயன்படுத்தப்படவுள்ள பாதாள சாக்கடை மூடிகளின் இருப்புகள் குறித்து ஆய்வு செய்த பின்பு



வார்டு எண்.94க்குட்பட்ட மாச்சம்பாளையம், ஆறுமுககவுண்டன் வீதியில் செயல்பட்டுவரும் நியாய விலைக்கடையினை நேரில் பார்வையிட்டு, ஆய்வு மேற்கொண்டு,



நியாய விலைக்கடையில் பராமரிக்கப்பட்டுவரும் பதிவேடுகள், பொருட்கள் இருப்பு பதிவேடுகள் குறித்து கேட்டறிந்தார்.

மேலும், வார்டு எண். 97-க்குட்பட்ட ஐயப்பா நகர் பகுதியில் உயர்மட்ட பாலம் அமைப்பது தொடர்பாக மாநகராட்சி ஆணையாளர் மா.சிவகுரு பிரபாகரன் நேரில் பார்வையிட்டு ஆய்வு மேற்கொண்டார்.

இந்நிகழ்வின்போது துணை மேயர் ரா.வெற்றிசெல்வன், துணை ஆணையாளர் க.சிவகுமார், தெற்கு மண்டலக்குழுத் தலைவர் ரெ.தனலட்சுமி, உதவி ஆணையர் (பொ) இளங்கோவன், உதவி செயற்பொறியாளர் கனகராஜ் ஆளுங்கட்சித் தலைவர் கார்த்திகேயன், மாமன்ற உறுப்பினர்கள் உதயகுமார், அப்துல் காதர், அஸ்லாம் பாஷா, குணசேகரன், உதவி நகரத் திட்டமிடுநர் ஜெயலட்சுமி, மண்டல சுகாதார அலுவலர் ஆண்டியப்பன், உதவிப் பொறியாளர் சபரிராஜ் மற்றும் மாநகராட்சி அலுவலர்கள் உடனிருந்தனர்.

Newsletter

கோவையில் ஒரே நாளில் 600க்கும் மேற்பட்ட தெருநாய்களுக்கு வெறிநாய்க்கடி தடுப்பூசி

Coimbatore மாநகராட்சி வார்டு 50, 51, 52, 54, 100 பகுதிகளில் வெறிநாய்க்கடி தடுப்பூசி திட்டத்தை தீவிரப்படுத்தி, கால்நடை மர...

Multiple LPG Cylinders Explode at Migrant Workers’ Quarters in Coimbatore’s Nava India

More than 40 temporary sheds were gutted after seven LPG cylinders exploded one after another at a migrant workers’ colo...

கோவை நவ இந்தியாவில் அடுத்தடுத்து வெடித்த 7 சமையல் எரிவாயு சிலிண்டர்கள்

கோவை நவ இந்தியா பகுதியில் வடமாநிலத் தொழிலாளர்கள் தங்கியிருந்த தற்காலிகக் குடியிருப்பில் அடுத்தடுத்து 7 சமையல் எரிவாயு சி...

கோவை கற்பகம் நிகர்நிலை பல்கலைக்கழகத்தில் இணையக் குற்ற விழிப்புணர்வு நிகழ்ச்சி

கோவை, கற்பகம் நிகர்நிலை பல்கலைக்கழகத்தில் ஆகஸ்ட் 27, 2026 அன்று இணையக் குற்ற விழிப்புணர்வு நிகழ்ச்சி நடைபெற்றது. கூடுதல்...

மேட்டுப்பாளையம் துணை மின் நிலையத்தில் நாளை (29.08.2026) மின்தடை

மேட்டுப்பாளையம் துணை மின் நிலையத்தில் மாதாந்திர பராமரிப்பு பணிகள் நாளை (29.08.2026) காலை 9 மணி முதல் மாலை 5 மணி வரை நடைப...

பசூர் துணை மின் நிலையத்தில் நாளை (29.08.2026) மின்தடை

பசூர் துணை மின் நிலையத்தில் நாளை ஆகஸ்ட் 29 அன்று காலை 9 மணி முதல் மாலை 5 மணி வரை மாதாந்திர மின் பராமரிப்பு பணி நடைபெறும்...